Published:Updated:

`இந்தியா பாதுகாப்பற்ற நாடு; வெளிநாட்டவர் அங்கு செல்ல வேண்டாம்!' - ஜாவித் மியான்டட்

'இந்தியாவைவிட பாகிஸ்தான் பாதுகாப்பான தேசம்' என்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவிட் மியான்டட்.

ஜாவித் மியான்டட்
ஜாவித் மியான்டட்

இந்தியா பாதுகாப்பற்ற நாடு, அங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை நிறுத்த வேண்டுமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவிட் மியான்டட் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு, லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்குப் பிறகு, 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. தற்போதுதான், இலங்கை அணி மீண்டும் அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

கங்குலியுடன் ஜாவிட் மியான்டட்
கங்குலியுடன் ஜாவிட் மியான்டட்

இந்தியாவில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்துவருவதால், இந்தியாவை பாதுகாப்பற்ற நாடு என்று ஜாவிட் மியான்டட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``பாகிஸ்தான் பாதுகாப்பற்ற தேசம் அல்ல. இந்தியாதான் பாதுகாப்பற்ற தேசம். சுற்றுலாப் பயணிகள் அங்கே செல்வது நல்லதல்ல. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஐசிசி அங்கே நடத்த வேண்டாம். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

`நான்கு மகன்களுக்கும் ரஜினி படத்தின் பெயர்கள்!' -மதுரையில் இப்படியும் ஒரு ரசிகர்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஷான் மாணி கூறுகையில், ''தற்போது இலங்கை அணி இங்கே வந்து விளையாடுகிறது. பாகிஸ்தான், இந்தியாவைவிட பாதுகாப்பான தேசம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்து டெஸ்ட் தொடரை நல்லபடியாக நடத்தியுள்ளோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு முக்கியமான தருணம். பாகிஸ்தான் நாட்டின் இமேஜ் உயர மீடியாக்களும் ரசிகர்களும் ஒத்துழைத்ததற்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

பெரும்பாலான நாள்கள் லண்டனில் வசிப்பவருக்கு பாகிஸ்தான் நாட்டின் உண்மை நிலவரம் தெரியுமா?
பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவரின் பேச்சுக்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''இஷான் மாணி லண்டனில் வசிப்பவர். பாகிஸ்தானில் வசித்தால்தான் அவருக்கு அந்த நாட்டின் உண்மை நிலவரம் தெரியும். பாகிஸ்தான், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துகூட கருத்து தெரிவிக்க அவருக்குத் தகுதியில்லை '' என்று பதிலடி கொடுத்துள்ளார்.