Published:Updated:

``மக்கள்தொகையில் அடுத்த ஆண்டு சீனாவை மிஞ்சும் இந்தியா" - ஐ.நா அறிக்கையில் தகவல்

ஐ.நா சபை

``2080-களில் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.” - ஐ.நா அறிக்கை

``மக்கள்தொகையில் அடுத்த ஆண்டு சீனாவை மிஞ்சும் இந்தியா" - ஐ.நா அறிக்கையில் தகவல்

``2080-களில் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.” - ஐ.நா அறிக்கை

Published:Updated:
ஐ.நா சபை

உலக மக்கள்தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகைப் பிரிவு, உலக மக்கள்தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,"இந்த ஆண்டு மக்கள்தொகை தினம் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியாக உயரும். 2030-ம் ஆண்டு, 850 கோடியாகவும், 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும் உயரக்கூடும். மேலும் 2080-களில் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா

தற்போது இந்திய மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள்தொகை சீன மக்கள்தொகையை முந்திவிடும். தற்போதைய சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாக இருக்கிறது. 2050-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 166 கோடியே 80 லட்சமாக உயரும். மேலும், 2050-ம் ஆண்டு வரை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் உலக மக்கள்தொகையில் எவ்வளவு உயர்வு இருக்குமோ அதில் பாதிக்கும் மேல் மேற்கண்ட நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும். உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 2019-ம் ஆண்டின் கணக்கீட்டின்படி 72.8 வயதாக இருந்தது. ஆனால் 2050-ம் ஆண்டு 77.2 வயதாக உயரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள்தொகைப் பெருக்கம்
மக்கள்தொகைப் பெருக்கம்

தற்போது உலக மக்கள்தொகையில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருக்கிறது. 2050-ம் ஆண்டில் இது 16 சதவிகிதமாக அதிகரிக்கும். அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைபோல 65 வயது முதியவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.