Published:Updated:

``சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்!" - வலியுறுத்தும் இந்தியா

அரிந்தம் பாக்சி

``மதச் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் பாகிஸ்தான் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்." - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி

``சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்!" - வலியுறுத்தும் இந்தியா

``மதச் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் பாகிஸ்தான் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்." - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி

Published:Updated:
அரிந்தம் பாக்சி

நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதுவொருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்க, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சியை அடுத்த கோரங்கி பகுதியில் இந்துக் கோயில் ஒன்று மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான அரிந்தம் பாக்சி, இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியிருக்கிறார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய அரிந்தம் பாக்சி, ``கராச்சியில் இந்துக் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்தோம். இத்தகைய செயலை மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதலாகவே நாங்கள் கருதுகிறோம்.

கராச்சியில் இந்துக் கோயில் இடிப்பு
கராச்சியில் இந்துக் கோயில் இடிப்பு
ட்விட்டர்

இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் எங்களின் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம். இருப்பினும், மதச் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாகிஸ்தான் உறுதிப்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று கூறினார்.

அரிந்தம் பாக்சியின் கருத்துக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ``இந்திய அரசு இயந்திரத்தின் முழு ஆதரவையும் பெற்ற மத வெறியர்களால், முஸ்லிம் சமூகத்தின்மீது நடத்தப்படும் வன்முறையைப்போல் அல்லாமல், பாகிஸ்தான் அரசு இந்த விவாகரத்தில் குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது" எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism