Published:Updated:

``ஐ.நா-வில் இந்தியா புதினைக் கண்டிக்க வேண்டும்!" - அமெரிக்க இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ரோ கன்னா

இந்தியா - அமெரிக்கா
News
இந்தியா - அமெரிக்கா

`ரஷ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ, இந்தியா கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது. இந்தியாவை சீனா ஆக்கிரமித்தபோது, நாங்கள் (அமெரிக்கா) தான் அவர்களுடன் இருந்தோம்.' - ரோ கன்னா

Published:Updated:

``ஐ.நா-வில் இந்தியா புதினைக் கண்டிக்க வேண்டும்!" - அமெரிக்க இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ரோ கன்னா

`ரஷ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ, இந்தியா கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது. இந்தியாவை சீனா ஆக்கிரமித்தபோது, நாங்கள் (அமெரிக்கா) தான் அவர்களுடன் இருந்தோம்.' - ரோ கன்னா

இந்தியா - அமெரிக்கா
News
இந்தியா - அமெரிக்கா

பிப்ரவரி 24-ல் உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போர், ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலைக் கண்டித்து, உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. மேலும், அண்மையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியா, ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் மீது இதுவரை ஒரு முறைகூட ரஷ்யா, உக்ரைன் என யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், பேச்சுவார்த்தை ஒன்றே போருக்குத் தீர்வாக அமையும் என நடுநிலை வகித்து வாக்கெடுப்பைப் புறக்கணித்துவந்தது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, அமெரிக்காவும் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறது. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் முடிவெடுக்க இந்தியா நடுங்குகிறது எனக் கூறியிருந்தார்.

அமெரிக்க இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ரோ கன்னா (Ro Khanna)
அமெரிக்க இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ரோ கன்னா (Ro Khanna)

இந்த நிலையில், அமெரிக்க இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரான ரோ கன்னா (Ro Khanna) உக்ரைன் விவகாரத்தில் ``புதினை இந்தியா கண்டிக்க வேண்டும்" எனத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``உண்மையில் நான் இந்தியாவைப் பற்றித் தெளிவாக இருக்கிறேன். உக்ரைன் மீதான ரஷ்யாவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக முதலில் இந்தியா ஐ.நா-வில் புதினைக் கண்டிக்க வேண்டும். பிறகு எந்தப் பக்கத்தைத் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். புதினைத் தனிமைப்படுத்த உலக நாடுகளை நாம் ஒன்றுதிரட்ட வேண்டும். ரஷ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ, இந்தியா கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது. இந்தியாவை சீனா ஆக்கிரமித்தபோது, நாங்கள் (அமெரிக்கா) தான் அவர்களுடன் இருந்தோம். இதுதான் அவர்கள் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கான நேரம். சீனாவைக் கட்டுப்படுத்த எங்களுக்கு இந்தியா ஒரு நட்பு நாடாகத் தேவை" எனக் கூறியுள்ளார்.