Published:Updated:

`இம்ரான் சொல்வது தவறு; அமைதியை நோக்கினால் மோசமான விளைவுதான் கிடைக்கிறது!'- இந்திய தூதர்

பிரேம் குமார் எஸ்.கே.

பதன்கோட்டில் இந்திய விமான தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது.

Imran khan
Imran khan

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவை குற்றம்சாட்டி வருகிறது. மற்ற நாடுகளை அணுகி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணகோரிக்கை வைத்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானில் கோரிக்கை ஏற்க மறுத்து, சிம்லா ஒப்பந்தப்படி, இரு தரப்பும் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணும்படி என்று தெரிவித்தது.

Imran khan - Trump
Imran khan - Trump

அமெரிக்கா இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்த போதும் இந்தியா அதை முழுமையாக மறுத்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் எனவும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை நிறுத்துவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இனி இந்தியாவுடன் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது எல்லா பேச்சுவார்த்தை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டோம். இதற்கு மேல் நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை” என்றார்.

Pathankot
Pathankot

பதன்கோட்டில் இந்திய விமான தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

``பாகிஸ்தான் கொஞ்சம் ஓகே; ஆனால், இந்தியா ஒன்றுமே செய்யவில்லை!” - ட்ரம்ப் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்திய தூதரான ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா, ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்வது தவறு. அமைதியை நோக்கி நாங்கள் ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும்போதும் எங்களுக்கு மோசமான விளைவுகள்தான் பரிசாக கிடைத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான, மீண்டு வரமுடியாத நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.