Published:Updated:

`கொரோனாவை வைத்து இஸ்லாமியர்களை இந்தியா டார்கெட் செய்கிறது!'- இம்ரான் குற்றச்சாட்டு

இந்தியா மீது இம்ரான் குற்றச்சாட்டு
இந்தியா மீது இம்ரான் குற்றச்சாட்டு

`இந்தியாவில் கோவிட் வைரஸ் தீவிரமெடுத்துள்ளதை மறைக்க முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை மோடி அரசு திணித்து வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் சிக்கி வாடி வருகின்றனர்' என்று குற்றம் சாட்டியுள்ளார் இம்ரான் கான்.

முஸ்லிம்கள் இந்தியாவில் கொரோனாவைப் பரப்புவதாக தவறான தகவல்களைப் பரப்புவதாக இந்திய அரசுக்கு இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பின் மனித உரிமை மீறல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆரிஃப் ஆல்ஃவி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், ``காஷ்மீர் மக்களை வன்முறை, சித்ரவதை மற்றும் அடக்குமுறை மூலம் இந்திய அரசாங்கம் அடக்குகிறது.

கொரோனா தாக்குதல்
கொரோனா தாக்குதல்
மாதிரி படம்

காஷ்மீரில் பொதுமக்களுக்குப் பயன்பாட்டில் உள்ள வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையை விட அங்கே குவிக்கப்பட்டுள்ள படையினரின் விகிதம் அதிகமாக உள்ளது. அதோடு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ இஸ்லாமியர்கள்தான் காரணமென்ற தவறான தகவல்களை மீடியாக்கள் வழியாக இந்திய அரசு பரப்புகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``இந்தியாவில் கோவிட் வைரஸ் தீவிரமெடுத்துள்ளதை மறைக்க முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை மோடி அரசு திணித்து வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் சிக்கி வாடி வருகின்றனர். ஜெர்மனியில் யூதர்களை ஒடுக்க நாஜிக்கள் செய்த விஷயத்தை இந்தியாவில் மோடி அரசு செய்து வருகிறது. மோடி அரசின் இனவெறி ஆதிக்க சித்தாந்தத்துக்கு இது ஆதாரம்'' என்று கூறியுள்ளார் .

பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறது
இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்த்தவா, ``இந்தக் கொரோனா காலத்தில் பாகிஸ்தானில்தான் சிறுபான்மையின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்

பாகிஸ்தான் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறது'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு