Published:Updated:

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு நிவாரண உதவி - இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு!

சுனாமி

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு, 2 லட்சம் அமெரிக்க டாலர் உடனடி நிவாரண உதவியாக அளிக்கப்படவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு நிவாரண உதவி - இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு!

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு, 2 லட்சம் அமெரிக்க டாலர் உடனடி நிவாரண உதவியாக அளிக்கப்படவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.

Published:Updated:
சுனாமி

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு, 2 லட்சம் அமெரிக்க டாலர் உடனடி நிவாரண உதவியாக அளிக்கப்படவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜனவரி 15-ம் தேதி தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, டோங்கா நாட்டை சுனாமி தாக்கியது. டோங்கா தீவுகளில் நீருக்கு அடியில் எரிமலை வெடித்ததால், அந்தத் தீவு முழுவதையும் சுனாமி தாக்கியது. சுனாமி எச்சரிக்கை காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சுனாமியால் ஏராளமான மக்கள் இறந்தனர். அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் ஏராளமானோர் அவதிப்பட்டனர். எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள டோங்கா தீவுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் உதவிகரம் நீட்டிவருகின்றன. டோங்காவை சுனாமி தாக்கியது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

நிவாரண உதவி
நிவாரண உதவி

இந்த நிலையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு, 2 லட்சம் அமெரிக்க டாலர் உடனடி நிவாரண உதவியாக அளிக்கப்படவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தப் பேரழிவால் ஏற்பட்ட சேதத்தை எதிர்கொள்ளும் டோங்கா அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism