ரஷ்யா- உக்ரைன் இடையே தொடர்ந்து வரும் போரால், உக்ரைன் பெருமளவு பாதிக்கப்பட்டுவருகிறது. பாதுகாப்பு கருதி உக்ரைனை விட்டு அனைத்து நாட்டுத் தூதரகங்களும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
அந்த வகையில், மத்திய அரசு 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியிருந்த 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் இந்தியா மீட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகம் கடந்த மார்ச் 13-ம் தேதி தற்காலிகமாக உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் உள்ள வர்சா நகருக்கு மாற்றப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், தற்போது இன்னும் போர் சூழல் முடிவுக்கு வராத சூழலில், மீண்டும் இந்தியத் தூதரகம் உக்ரைனின் தலைநகர் கீவில் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism