ஐக்கிய அரபு நாடுகளில் இந்திய ராணுவத் தளபதிக்கு உற்சாக வரவேற்பு... ஓரங்கட்டப்படும் பாகிஸ்தான்?!

நவம்பர் மாதம் சவுதியில் நிகழ்ந்த ஜி-20 மாநாட்டின் நினைவாக அந்நாட்டு செலவாணியான (ரியால்) புதிய 20-ரியால் நோட்டை அறிமுகப்படுத்தியது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளான (PoK) பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி புதிய வரைபடத்தினை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது.
மனோஜ் முகுந்த் நரவனேனின் அரபு நாடுகள் விசிட்!
இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பாதுகாப்பு பிரச்னைக்குப் பின்னர், இந்திய ராணுவப் படை தளபதியான மேஜர் மனோஜ் முகுந்த் நரவனே 6 நாள் சுற்றுப்பயணாமக ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ அளவிலான முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது இந்திய ராணுவத் தளபதி இந்தாண்டில் மேற்கொண்ட மூன்றாவது சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு குறித்தும், ராணுவ மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவு; ஓரங்கட்டப்படும் பாகிஸ்தான்?!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற மேஜர் மனோஜ் முகுந்த் நரவனே அங்குள்ள ராணுவத் தளவாடங்களையும், ராணுவப் பயிற்சிப் பள்ளிகளையும் பார்வையிட்டார். பின்னர், சவுதி அரேபியாவுக்குச் சென்ற இந்திய தளபதிக்கு அந்நாட்டு அரசு சிவப்புக்கம்பள வரவேற்ப்பளித்தது. அங்கு முதல் நாள் சந்திப்பின்போது, சவுதி அரேபியா ராணுவத்தின் தரைப்படைத் தளபதியான ஜெனரல் முகமது சலே அல் அமேரியிடம் உரையாடினார். அதில், இந்திய, அரபு நாடுகளுக்கு இடையேயான ராணுவ பயிற்சிகளில் மேற்கொள்ளும் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தனர். மேலும் சவுதி ராணுவப் படையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரிடம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் மூலம் இந்தியா- ரஷ்யா இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாகிவரும் ’பிரம்மோஸ்’ ஏவுகணையை வாங்குவதற்கு சவுதி, கத்தார் உள்ளிட்டவை விருப்பம் தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பானது, சவுதி அரேபியா சமீப காலமாக பாகிஸ்தான் மீது காட்டிவரும் வெறுப்பரசியலை மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா சுற்றுபயணம் மேற்கொண்டார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தினை இந்திய அரசாங்கம் ரத்து செய்த விவகாரத்தில் சவுதி அரேபியா காஷ்மீருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தளபதியுடன் அரபு நாட்டின் அரசரான முகமது பின் சல்மானுடன் நிகழவிருந்த சந்திப்பானது ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானை ஒதுக்கிய சவுதி அரசு!
கடந்த நவம்பர் மாதம் சவுதியில் நிகழ்ந்த ஜி-20 மாநாட்டின் நினைவாக அந்நாட்டு செலவாணியான (ரியால்) புதிய 20-ரியால் நோட்டை அறிமுகப்படுத்தியது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளான (PoK) பகுதிகளை பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து நீக்கி புதிய வரைபடத்தினை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது.
“சவுதி அரேபியாவின் இந்தச்செயல் பாகிஸ்தானைத் தாக்கும் வகையில் இருப்பதாகவும், மேலும் இது சவுதி அரேபியாவின் ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகை செய்வதாகவும் தோன்றுகிறது” என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வந்தன. தற்பொழுது நிகழ்ந்த இந்த சந்திப்பானது சவுதி அரேபியா இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவுநிலையை மேலும் உறுதிசெய்துள்ளது.
கூட்டு ராணுவ முயற்சியில் இந்தியா- சவுதி அரேபியா!
இந்நிலையில், இந்தியாவும் சவுதி அரேபியாவும் இணைந்து கப்பற்படையில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளப்போவதாக கடந்தாண்டு இறுதியிலேயே தெரிவித்திருந்தனர். இவை கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போன நிலையில் தற்பொழுது மேஜர் மனோஜ் முகுந்த் நரவனேயின் இந்த சந்திப்பில் மீண்டும் ஆலோசசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அரபு நாடுகள் பாகிஸ்தானை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவிற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெரிவித்துவரும் சூழலில் பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்கி வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.