Published:Updated:

லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லை... இந்திய - சீனப் படைகள் விலக்கம்? - என்ன நடக்கிறது?!

இந்தியா - சீனா

கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனா தரைநிலையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்புகள், வாழ்விடங்கள் மற்றும் கட்டமைப்புகளை படைவீரர்களைப் பராமரிக்க லடாக்குக்கு அருகில் கட்டமைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லை... இந்திய - சீனப் படைகள் விலக்கம்? - என்ன நடக்கிறது?!

கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனா தரைநிலையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்புகள், வாழ்விடங்கள் மற்றும் கட்டமைப்புகளை படைவீரர்களைப் பராமரிக்க லடாக்குக்கு அருகில் கட்டமைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
இந்தியா - சீனா

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவிருக்கும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்குக்கு உட்பட்ட கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து சீன, இந்தியப் படைகள் வெளியேற தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை (8-9-22) அன்று இந்தியாவும் சீனாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், கிழக்கு லடாக்குக்கு உட்பட்ட கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியின் ரோந்துப் புள்ளி-15-லிருந்து இந்திய மற்றும் சீனப் படைகள் வெளியேறப்போவதாக கூறியுள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உஸ்பெக்கிஸ்தானில் உச்சிமாநாட்டை நடத்தவிருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன எனக் கூறப்படுகிறது.

லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லை... இந்திய - சீனப் படைகள் விலக்கம்? - என்ன நடக்கிறது?!

கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்தியத் தரப்பில் 20 வீரர்களும், சீனத் தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் எழுந்தது. பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லடாக்கின் பல்வேறு முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் வீரர்களும் முகாமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் கலந்துகொள்ளப்போவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செப்.8 அன்று நடந்த இந்திய-சீன கார்ப்ஸ் கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 16-வது சுற்றில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி, கோக்ரா- ஹாட்ஸ்பிரிங்ஸ் (PP-16) பகுதியிலுள்ள இந்திய, சீனப் படைகள் திட்டமிட்டப்படி விலகத் தொடங்கியுள்ளன எனக் கூறப்படுகிறது. இது எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் அமைதிக்கு உகந்த வழி என இருதரப்பும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அதற்கான பணிநீக்க நடைமுறைகள் நடந்துவருகின்றன.