Published:Updated:

பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்தும் இரண்டு இந்திய வம்சாவளிகள் - யார் இவர்கள்?

ரிஷி சுனக் ( ட்விட்டர் )

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூவெல்லா பிரேவர்மனும் போட்டியில் இருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்தும் இரண்டு இந்திய வம்சாவளிகள் - யார் இவர்கள்?

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூவெல்லா பிரேவர்மனும் போட்டியில் இருக்கிறார்.

Published:Updated:
ரிஷி சுனக் ( ட்விட்டர் )

கொரோனா விதிமுறை மீறல் உட்பட பல சர்ச்சைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் பதவியையும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியையும் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது

மோடியுடன் போரிஸ் ஜான்சன்
மோடியுடன் போரிஸ் ஜான்சன்
ட்விட்டர்

புதிய பிரதமரைத் தேர்வுசெய்வதற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. பிரிட்டனின் அரசமைப்புச் சட்டப்படி, ஆளுங்கட்சியின் தலைவராகத் தேர்வுசெய்யப்படுபவரே, பிரதமர் பதவியையும் ஏற்பார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலில் இரண்டுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். முதற்கட்டமாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சுற்றுகளாக வாக்களித்து, இறுதிச்சுற்றில் போட்டியிடும் இருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதன் பிறகு, கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து ஒருவரைத் தேர்வுசெய்வார்கள். அவர், பிரதமராக நியமிக்கப்படுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் 11 பேர் போட்டியில் களமிறங்கிய நிலையில், மூன்று பேர் பின்வாங்கியதால், தற்போது எட்டுப் பேர் போட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் எட்டுப் பேரும், இதற்கு முன் இல்லாத அளவுக்கு, மாறுபட்ட பின்புலங்களைக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் மற்றொருவர், இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன். அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரலான இருக்கும் இவர், பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து அரசின் சட்ட வல்லுநர்களில் மிக மூத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூவெல்லா பிரேவர்மன்
சூவெல்லா பிரேவர்மன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அதிக செல்வாக்கு பெற்றவராக முன்னேறுகிறார். பிரதமர் பதவிக்கான போட்டியில் கலந்துகொள்வதற்கு அடிப்படைத் தேவையான 20 எம்.பி-க்களின் ஆதரவு ரிஷி சுனக்குக்கு ஜூலை 12-ம் தேதி கிடைத்தது. முதல் சுற்று வாக்குப்பதிவு ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது. ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்ற செய்திகள் வருகின்றன.

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட ரிஷி சுனக்கின் குடும்பம், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது. இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் பிறந்த ரிஷி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார்.

ரிஷி சுனக் - அக்‌ஷதா
ரிஷி சுனக் - அக்‌ஷதா

அமெரிக்காவில் தன்னுடன் படித்த சக மாணவியான அக்‌ஷதாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரான 'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தியின் மகள்தான் அக்‌ஷதா. இவர்களின் திருமணம் பெங்களூரில் 2009-ம் ஆண்டு நடைபெற்றது., இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

மனைவியின் துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ரிஷிக்கு, அரசியல்மீது ஆர்வம் ஏற்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து சில ஆண்டுகள் கட்சிப் பணி ஆற்றிய ரிஷிக்கு, வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு 2014-ம் ஆண்டு கிடைத்தது. அதில் அவர் வெற்றிபெற்றார்.

ரிஷி சுனக், அக்‌ஷதா
ரிஷி சுனக், அக்‌ஷதா

வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை இணை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார். காலநிலை மாற்றம் விவகாரத்தில் தெரசா மே பதவி விலகியதால், போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் ஆனார். அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்புக்கு நிகரான பதவி ரிஷிக்குக் கிடைத்தது.

மீண்டும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ரிஷி, போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜாவித் ராஜினாமா செய்ததையடுத்து, இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஆனார்.

போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்

கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக, ரிஷி சுனக் மீது மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது. தற்போது, இவர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.