Published:Updated:

உக்ரைன்: ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் பலி! - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

இந்திய மாணவர் பலி

ரஷ்யப் படைகளின் தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்: ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் பலி! - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ரஷ்யப் படைகளின் தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
இந்திய மாணவர் பலி

உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கீவ் நகரிலிருந்து அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

போருக்கு மத்தியில் உக்ரைனில் வாழும் பல்வேறு நாட்டு மக்களும் போலந்து, ஹங்கேரி, ருமேனியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துவருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்
வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்
ட்விட்டர்

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இன்று காலை கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவர் குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது.

மேலும், அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கார்கிவ் மற்றும் பிற மண்டலங்களில் உள்ள நகரங்களில் இன்னும் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் உக்ரைனின் தூதர்களுக்கு வெளியுறவுச் செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்றும் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism