Published:Updated:

``யுத்தம் முடிந்த பிறகு வருகிறேன்!” - இந்தியா திரும்ப மறுக்கும் மாணவி சொன்ன நெகிழ்ச்சிக் காரணம்

உக்ரைன்

இதுவரை பல லட்சம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

``யுத்தம் முடிந்த பிறகு வருகிறேன்!” - இந்தியா திரும்ப மறுக்கும் மாணவி சொன்ன நெகிழ்ச்சிக் காரணம்

இதுவரை பல லட்சம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

Published:Updated:
உக்ரைன்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவில் இருந்தபடி களநிலவரத்தை வீடியோ மூலமாக விவரித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், உக்ரேனிய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

உக்ரைன் - இந்திய மாணவர்கள்
உக்ரைன் - இந்திய மாணவர்கள்

மேலும், உக்ரைனில் சிக்கியிருக்கும் 20,000 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை முயன்றுவருகிறது. இந்த நிலையில், மருத்துவம் பயில உக்ரைன் நாடு சென்ற ஹரியானாவைச் சேர்ந்த மாணவி இந்தியா திரும்ப மறுத்துள்ளார்.

இது குறித்து வெளியான தகவலில், மருத்துவம் பயிலச் சென்ற மாணவிக்கு, கல்லூரியில் தங்கும் விடுதி கிடைக்கவில்லை. அதனால் வெளியே தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். தற்போது போர்ச் சூழல் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் யுத்தகளத்துக்குச் சென்றுவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் உக்ரைன்  அதிபர் பெட்ரோ போரோஷென்கோ
முன்னாள் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ
twitter

அதனால், அவரின் மனைவியும், மூன்று குழந்தைகளும் பதுங்குகுழியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அந்தக் குழந்தைகளைவிட்டு வர மனமில்லை. எனவே யுத்தம் முடிந்த பிறகு இந்தியா வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் தாய் எவ்வளவு முயன்றும் அவர் வர மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அந்த மாணவியின் குடும்ப நண்பர் தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism