Published:Updated:

`பேராசிரியர்... ஆராய்ச்சியாளர்... அமைச்சர்!'- கனடா நாடாளுமன்றத்தில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் ( Twitter/@AnitaOakville )

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கனடாவில் கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீரின் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 157 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்
Twitter/@AnitaOakville

இரண்டாவது முறையாகப் பிரதமராகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையில் மொத்தம் 35 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 17 பெண்கள் மற்றும் 18 ஆண்கள் உள்ளனர். இதுநாள் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமைச்சர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ட்ரூடோவின் அமைச்சரவையில் மொத்தம் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முதல் முறையாகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இணைந்துள்ளார்.

கனடாவைக் கலக்கிய 1972 சென்டிமென்ட்! - தந்தை பாணியில் மீண்டும் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா அமைச்சரவையில் ஏற்கெனவே 3 இந்தியர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களின் வரிசையில் புதிதாக தற்போது இணைந்துள்ளார் அனிதா ஆனந்த். இவரது தந்தை சுந்தரம் விவேகானந்த் வேலூரைச் சேர்த்தவர்; தாய் சரோஜ் ராம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர். அனிதாவின் தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள்.

அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்
Twitter/@AnitaOakville

அனிதா, 1967-ம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பிறந்து வளர்ந்துள்ளார். முதுநிலை சட்டப்படிப்பு முடித்துள்ள அவர் அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியா - கடனா மக்களிடையே மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். மேலும், கனாவில் உள்ள இந்து நாகரிக அருங்காட்சியகத்தில் தலைவராகவும் இருந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1985-ம் ஆண்டு டொரொண்டோவிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் சுமார் 182 பேர் உயிரிழந்தனர். பின்னாளில் அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து முக்கியப் பங்காற்றியுள்ளார் அனிதா.

இந்நிலையில் கனடாவில் நடந்த தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓன்கவுலே (Onkavulle) பகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராக அனிதா களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். கனடா அமைச்சரவையில் இந்த வருடம் ஏழு பேருக்குப் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் அனிதாவும் ஒருவர்.

அனிதா ஆனந்த்
அனிதா ஆனந்த்
Twitter/@AnitaOakville

கனடா ராணுவத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்கள் வாங்குவது போன்ற செலவினங்களை மேற்பார்வையிடும் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் இலாகா அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனக்குப் பதவி வழங்கப்பட்டது பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், “பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டிருப்பதைப் பெரிய மரியாதையாகக் கருதுகிறேன். கனடாவின் 43 வது நாடாளுமன்றத்தில் ஓன்கவுலேயைப் பிரதிநிதித்துவப்படுத்த மற்றும் கனடியர்களுக்காக கடுமையாக உழைக்க நான் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு