Published:Updated:

`அதை யாரு சொல்றதுன்னு இல்லியா!'- ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பதிலடிகொடுத்த இந்தியா #UNHRC

Indian envoys
Indian envoys ( MEA )

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் ரத்துசெய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன்பிரதேசங்களாகப் பிரிக்கும் வகையிலான சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயன்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்தபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுகுறித்து பேசினார்.

 `கடினமான சூழல்தான்; ஆனால், சிறந்த உரையாடல்!’ - மோடி, இம்ரான் கானிடம் பேசிய ட்ரம்ப்
Imran Khan - Donald Trump
Imran Khan - Donald Trump
Twitter

ஆனால், `அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் மத்தியஸ்தம் செய்யத் தயார்' என்பதே ட்ரம்ப்பின் பதிலாக இருந்தது. இதுதவிர, ஐ.நா-வின் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து ரகசியமாக விவாதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,`உள்நாட்டுப் பிரச்னையில் மூன்றாவது நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை' என்று கூறி பாகிஸ்தானை மூக்குடைத்தார்.

`உங்ககிட்ட இருந்தே தொடங்கலாம்...! - பாகிஸ்தான், சீனா முயற்சியை முறியடித்த சையது அக்பருதீன்

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா-வின் 42-வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டது. கூட்டத்துக்காக ஜெனீவா புறப்படும் முன்னர் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ``இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பாகிஸ்தான் முயற்சிக்கும்'' என்று கூறியிருந்தார். மொத்தம் 47 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐக்கிய நாடுகள் அவையில், ஒரு விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி விவாதிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவு வேண்டும்.

pakistan foreign minister shah mehmood qureshi
pakistan foreign minister shah mehmood qureshi
Twitter

இந்த ஆதரவு கிடைக்கவில்லையென்றால், அவசர விவாதம் கோர பாகிஸ்தானால் முடியாது. பாகிஸ்தானின் கோரிக்கைக்கு மனித உரிமைகள் ஆணையம் செவிசாய்க்காது. அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, இந்த கூட்டத்தொடரில் எப்போது வேண்டுமாலும் கோரிக்கை விடுக்கலாம். ஆனால், அந்தக் கோரிக்கையை வரும் 19-ம் தேதிக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குள்ளாக மற்ற நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தானின் முயற்சி கைகூடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தெரிகிறது.

அதேநேரம், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அஜஸ் பிஸாரியா, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் (கிழக்கு) விஜய் தாக்கூர் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர், வாதங்களை எடுத்துவைத்தனர். அவருடன் ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரான ராஜீவ் சந்தரும் பேசினார்.

`மாஸ் காட்டும் ஜெய்சங்கர்!’ - காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்படும் பாகிஸ்தான்
Indian envoys
Indian envoys
MEA

விஜய் தாக்கூர் சிங் பேசுகையில், ``இங்கே ஒரு குழுவினர் முறையற்ற மொழியில் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பொய்யான தகவல்களையும் எனது நாட்டுக்கு எதிராகக் கூறினர். பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களுக்குப் பல ஆண்டுகளாக அடைக்கலம்கொடுக்கும் உலக தீவிரவாதத்தின் மையப்புள்ளியில் இருந்துதான் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்பதை உலக நாடுகள் அறியும். தனது ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை அந்த நாடு நிகழ்த்திவருகிறது'' என்று காட்டமாக பதிலடிகொடுத்தார்.

அதேபோல், அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் (NRC) குறித்துப் பேசிய அவர், ``என்.ஆர்.சி என்பது சட்டரீதியான, வெளிப்படையான மற்றும் பாகுபாடற்ற சட்ட நடவடிக்கை. இந்திய உச்ச நீதிமன்றத்தால் அது கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் மற்றும் ஜனநாயக மரபுகளின்படி அது நடைமுறைபடுத்தப்படும்'' என்றார்.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, ஐ.நா ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வலியுறுத்தினார். இதுகுறித்துப் பேசியபோது, ஜம்மு - காஷ்மீரை இந்திய மாநிலம் என்று அவர் குறிப்பிட்டது, பாகிஸ்தான் ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஜம்மு - காஷ்மீர் குறித்துப் பேசுகையில், பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதை `இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று குறிப்பிடுவதே வழக்கம்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவுக்கான நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் விமர்ஷ் ஆர்யன், பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், காஷ்மீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Vimarsh Aryan
Vimarsh Aryan
ANI

மேலும், பாகிஸ்தானின் இந்தப் பிரசாரம் தீவிரவாதத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லவே உதவும் என்று கூறிய அவர், பாகிஸ்தானின் இந்தப் பிரசாரத்தை இந்தியா நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு