Published:Updated:

ஆப்கானிஸ்தான்: ``எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம்!" - தாலிபன் அரசு

தாலிபன்

``ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து பிற நாடுகள்மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். இதனை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்துக்கும், உலக நாடுகள் அனைத்துக்கும் கூறிக்கொள்கிறோம்." - தாலிபன் அரசு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். தாலிபன்கள் ஆட்சி அமைந்தப் பிறகு அந்த நாட்டின் பொருளாதாரமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

சர்வதேச விவகாரங்களை தொடர்ந்து உற்றுநோக்கி வரும் தாலிபன்கள், பல பிரச்னைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உக்ரைன் போர் குறித்துகூட, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தாலிபன் அரசு
தாலிபன் அரசு
Kathy Gannon

இந்த நிலையில், தலிபன் அரசின் தலைவர் ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ``ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து பிற நாடுகள்மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். இதனை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்துக்கும், உலக நாடுகள் அனைத்துக்கும் கூறிக்கொள்கிறோம். அதே போல எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறோம். 2020-ம் ஆண்டு அமெரிக்காவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நாங்கள் கடைப்பிடிப்போம். அமெரிக்கா உட்பட உலக நாடுகளுடன் நல்ல முறையில் நட்புறவாக தொடர விரும்புகிறோம்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!