Published:Updated:

இரானில் இறுகும் ஆடைக் கட்டுப்பாடு; தலைமுடியை வெட்டி, ஹிஜாப்பை எரிக்கும் பெண்கள்! - என்ன காரணம்?

இரானில் இறுகும் ஆடைக் கட்டுப்பாடு

`7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.

இரானில் இறுகும் ஆடைக் கட்டுப்பாடு; தலைமுடியை வெட்டி, ஹிஜாப்பை எரிக்கும் பெண்கள்! - என்ன காரணம்?

`7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.

Published:Updated:
இரானில் இறுகும் ஆடைக் கட்டுப்பாடு

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடான இரானில், `எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்த நாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஹிஜாப்
ஹிஜாப்

இது ஒருபுறமிருக்க, அரசின் புதிய ஆடைக் கட்டுப்பாடு விதியை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி அண்மையில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், கடந்த வெள்ளியன்று போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர்களும், பெண் செயற்பாட்டாளர்களும், அரசுக்கெதிராகப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஏராளமான பெண்கள் தனிப்பட்ட முறையில் தங்களின் தலைமுடியை வெட்டி, ஹிஜாப்பை எரித்து அரசுக்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன.

இது குறித்து இரானியப் பத்திரிகையாளர் மசிஹ், செயற்பாட்டாளர் அலினெஜாட் (Masih Alinejad) ஆகியோர், ``போலீஸாரால், மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இரானியப் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள், 7 வயதிலிருந்து தலைமுடியை மறைக்கவில்லையென்றால் பள்ளிக்குச் செல்லவோ, வேலை செய்யவோ முடியாது. இந்தப் பாலின நிறவெறி ஆட்சியால் நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம்" என ட்வீட் செய்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கின்றனர்.