Published:Updated:

`அப்பா கிராமம்; பிரைவேட் விசிட்; பாதுகாப்பு வேண்டாம்'- இந்திய அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்திய அயர்லாந்து பிரதமர்

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தந்தை பிறந்த ஊரைக் காண அவர் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்.

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர்
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர்

உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வரத்கர் இந்தியாவுக்கு விசிட் அடித்துள்ளார். அவரின் வருகை குறித்து எந்தப் புகைப்படமும் மீடியாக்களில் வெளியாகவில்லை. பிரதமர் மோடியைச் சந்திக்கவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் செல்லவில்லை. ஏனென்றால், இது அவரின் பிரைவேட் விசிட். தன் தந்தை பிறந்த கிராமத்தைக் காண அவர் தன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

அயர்லாந்து தேசியக் கொடி
அயர்லாந்து தேசியக் கொடி

அயர்லாந்து பிரதமருக்கு 'தாய்நாடு ' இந்தியா என்று சொன்னால் வியப்பாக உள்ளது அல்லவா? ஆனால், அதுதான் உண்மை!உலகின் அழகான பணக்கார நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. பிரிட்டனையொட்டியுள்ள ஏராளமான தீவுகள் இணைந்த கூட்டம்தான் அயர்லாந்து நாடு. இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. இந்திய தேசியக் கொடி போலவே பச்சை, காவி, வெள்ளை நிறங்களில்தான் அயர்லாந்து தேசியக் கொடியும் இருக்கும். என்ன... அசோகா சக்ரா ஐரிஷ் கொடியில் இருக்காது. மற்றபடி, இரு நாட்டுக் கொடிகளும் ஒன்று போலவே காட்சியளிக்கும்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் தந்தை பேலோன்ஜி மிஸ்திரி அயர்லாந்தில் வசிப்பவர்தான். அயர்லாந்திலேயே மிகப் பெரிய பணக்காரர் இவர். இவரின் ஷபூர்ஜி பேலோன்ஜி குழுமம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அங்கு ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடிக்கு இந்தக் குழுமத்துக்கு சொத்து உள்ளது. பேலோன்ஜி மிஸ்திரிக்கு டாடா குழுமத்திலும் 18.3 சதவிகித பங்குகள் உள்ளன. அயர்லாந்து பொருளாதார வளர்ச்சிக்கு பேலோன்ஜி வித்திட்டுள்ளார் என்றால், அரசியலில் புகுந்து ஆட்சியைப் பிடித்துள்ளார் லியோ வரத்கர். மருத்துவரான லியோ அயர்லாந்தில் ஃபின் கயால் கட்சியைச் சேர்ந்த என்டா கென்னி பிரதமராக இருந்தபோது, பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தார். 2017-ம் ஆண்டு என்டா கென்னி பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து லியோ வரத்கர் அந்த இடத்தைப் பிடித்தார். இதே ஆண்டில், அயர்லாந்து பிரதமராகும்போது லியோவுக்கு வயது 38 மட்டுமே.

``அமானுஷ்யத்தில் நம்பிக்கை இல்லை!'' - 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் குடியேறிய தில் டாக்டர்

அயர்லாந்தில் ஒரே பாலின உறவுக்குத் தடையில்லை. 2015-ம் ஆண்டு லியோ தன்னை 'சமபால் ஈர்ப்புடையவர்' என்று அறிவித்தார். அயர்லாந்து நாட்டில் இப்படி முதன்முதலில் அறிவித்துக்கொண்ட அமைச்சர் இவர்தான். மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வரத் என்ற கிராமம்தான் லியோவின் தந்தை பிறந்த ஊர். இவரின், தந்தை அசோக் வரத்கர் 1966-ம் ஆண்டு பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்துள்ளார்.

டாக்டரான அசோக் வரத்கர், ஐரிஷ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவர் அயர்லாந்தில் குடியேறினார். 1979-ம் ஆண்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் லியோ பிறந்தார். தற்போது 40 வயதான லியோ, பல முறை இந்தியாவுக்கு வந்திருந்தாலும், தந்தை பிறந்த ஊரான வரத் கிராமத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், இந்த முறை ஒரு வார காலம் விடுப்பு எடுத்துக்கொண்டு வரத் கிராமத்துக்கு குடும்பத்துடன் அவர் வருகை தந்துள்ளார். இந்திய அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். ஆனால், 'இது என் தனிப்பட்ட விசிட். இதனால், போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை' என்று லியோ கூறிவிட்டதால். இந்திய அதிகாரிகள் வியந்துபோனார்கள்.

சகோதரியுடன் அயர்லாந்து பிரதமர்
சகோதரியுடன் அயர்லாந்து பிரதமர்
livemint

வரத் கிராமத்தில் லியோவின் ஒன்றுவிட்ட சகோதரி சுபைதா வசிக்கிறார். இவரின் வீட்டில் லியோ குடும்பத்தினர் தங்கியுள்ளனர். வரத் கிராமத்துக்கு வருகை தந்த அயர்லாந்து பிரதமருக்கு இந்திய பாரம்பர்ய முறைப்படி, ஆரத்தி எடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. தந்தை பிறந்த கிராமத்தை ஆவலுடன் சுற்றிப் பார்த்த, லியோ வரத்கர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். கிராமத்தில் இருந்த கிறிஸ்துவ ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். கோயில்களில் லியோ பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

பிரைவேட் விசிட் என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அடுத்த முறை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவேன்.
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர்
``என்.ஆர்.சி என்ற வார்த்தையை நாங்கள் விவாதித்ததே இல்லை!"... மோடி சொல்வது உண்மைதானா?

தன் விசிட் குறித்து லியோ கூறுகையில், ''என் சொந்த கிராமத்துக்கு வர வேண்டுமென்கிற ஆசை முடிவுக்கு வந்துள்ளது. என் தந்தை பிறந்த கிராமத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். கிராம மக்கள் அன்புடன் எங்களை வரவேற்றனர். இந்திய உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்டோம். பிரைவேட் விசிட் என்பதால் எந்த அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஒரு சிறப்பான தருணம். என்னுடைய பார்ட்னர், பெற்றோர், சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள், அவர்களின் குழந்தைகளுடன் இங்கு வந்துள்ளேன். என் தந்தைக்கு 80 வயதாகிறது. தந்தை தன் சொந்த கிராமத்துக்கு வந்திருப்பது அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. பிரைவேட் விசிட் என்பதால், எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை என்று இந்திய அதிகாரிகளிடத்தில் கூறி விட்டேன். புத்தாண்டு தினத்தை கோவாவில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். புத்தாண்டு கொண்டாட்ட நினைவுகளுடன் மீண்டும் அயர்லாந்து செல்கிறோம். ஆனால், மீண்டும் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக நிச்சயம் வருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.