Election bannerElection banner
Published:Updated:

இந்திய எல்லைக்குச் செல்வதற்கு முன்னர் கண்ணீர்விட்டு கதறினார்களா சீன ராணுவ வீரர்கள்? #ViralVideo

சீன வீரர்கள் கண்ணீர்
சீன வீரர்கள் கண்ணீர்

பேருந்து ஒன்றில் அமர்ந்திருந்த சீன ராணுவ வீரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு, கதறியபடியே பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. இது தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துப் பேசிய நிலையில், ராணுவ உயரதிகாரிகள் தலைமையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இரு தரப்பிலும் நேற்று நடைபெற்ற 14 மணி நேரப் பேச்சுவார்த்தையும் எந்தவொரு முடிவையும் எட்டாமல் முடிந்தது. அதேநேரம், எல்லையில் அமைதி திரும்புவதற்காக படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!
இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்தநிலையில், பேருந்து ஒன்றில் சீன வீரர்கள் கண்ணீர்விட்டுக் கதறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன. சீனாவின் யிங்ஷூ (Yingzhou) மாவட்டத்திலுள்ள ஃப்யாங் (Fuyang) நகரிலிருந்து அந்நாட்டு ராணுவத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களே அவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. சீன ராணுவ வீரர்கள் மத்தியில் பிரபலமான `கிரீன் ஃப்ளவர்ஸ் இன் தி ஆர்மி' பாடலை அவர்கள் பாடுவதும், அவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீருடன் அவர்கள் அந்தப் பாடலைப் பாடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

India-China Face-Off: `DSDBO சாலை... கிளாஸ் 70; அக்டோபர் 15 டார்கெட்!’ - என்ன நடக்கிறது எல்லையில்?

ஜி ஜின்பிங்குக்கு எதிரான மனநிலைகொண்ட தைவான், இந்த வீடியோவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. லிபர்டி டைம்ஸ், தைவான் நியூஸ் போன்ற அந்நாட்டு ஊடகங்கள், இந்த வீடியோ தொடர்பாக புதிய தகவலை வெளியிட்டுள்ளன. இந்திய எல்லையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படுவதற்கு முன்னர், இந்திய வீரர்களை எதிர்க்கொள்வது குறித்த அச்சத்தில் அந்த வீரர்கள் கண்ணீர்விட்டுக் கதறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளன தைவான் ஊடகங்கள். ஃப்யாங் நகர ரயில்நிலையத்தில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இதை மறுத்திருக்கும் சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ், கண்டனமும் தெரிவித்திருக்கிறது. இளம் ராணுவ வீரர்களான அவர்கள், தங்களது குடும்பங்களைப் பிரிந்து உணர்ச்சிபூர்வமான நிலையில் காணப்பட்ட அந்த வீடியோவை வேண்டுமென்றே தைவான் ஊடகங்கள் திரித்துத் தகவல் வெளியிட்டிருப்பதாகவும் குளோபல் டைம்ஸ் விளக்கமளித்திருக்கிறது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களிடையே கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில் இரு தரப்பும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதலில் தங்களுடைய வீரர்கள் உயிரிழப்பு குறித்து சீனா இதுவரை அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிடவில்லை.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP | Manish Swarup
`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

ஆனால், சீனா தரப்பில் 40 முதல் 45 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது. அதேபோல், பாங்கோங் சோ ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலை இந்திய ராணுவம் கடந்த ஆகஸ்ட்டில் வெற்றிகரமாக முறியடித்ததுடன், ஏரியை ஒட்டியிருக்கும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த சிகரங்களையும் கைப்பற்றியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு