Published:Updated:

மீண்டும் அடங்க மறுக்கும் கிம் - வடகொரியாவின் ஏவுகணை ஆட்டத்தின் விளைவுகள் என்னென்ன?!

ஏவுகணைச் சோதனை

40-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை இந்த ஆண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. `அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்?’ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

மீண்டும் அடங்க மறுக்கும் கிம் - வடகொரியாவின் ஏவுகணை ஆட்டத்தின் விளைவுகள் என்னென்ன?!

40-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை இந்த ஆண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. `அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்?’ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Published:Updated:
ஏவுகணைச் சோதனை
download

கடந்த மாதம் 6-ம் தேதி வடகொரியா இரண்டு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. அப்போது அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணைச் சோதனை, கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலடி தருவதற்காகவே சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது வடகொரியா. ஆனால் தற்போது எந்தக் காரணமும் இன்றி மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் குறுகிய ஏவுகணைச் சோதனையை நடத்தியிருக்கிறது வடகொரியா. இது கிழக்கு கடலோரத்திலுள்ள டாக்ஸோன் பகுதியிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்ததாக தென்கொரியா  தெரிவித்திருக்கிறது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, ஏவுகணைச் சோதனை ஆத்திரம் மூட்டுவதாக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்திவருவதாகவும் தென்கொரியா கூறியது. இந்த ஆண்டு மட்டும் தற்போது வரை வடகொரியா 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா ஏவுகணைச் பரிசோதனை
வடகொரியா ஏவுகணைச் பரிசோதனை

அணு ஆயுத வலிமைகொண்ட நாடாக மாறுமா?

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சீனாவிலிருந்து உணவுகள் இறக்குமதி குறைந்த நிலையில், வடகொரியா பெரும் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. மேலும் அந்த நாட்டு மக்கள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சத்தான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். அதற்காகத் தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவான உணவு சாப்பிட வேண்டும் என்று வடகொரிய மக்களுக்கு உத்தரவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அதிபர் கிம் ஜாங் உன். இவ்வாறு பசியால் மக்கள் வாடிய நிலையிலும், தொடர்ந்து ஏவுகணைச் சோதனையைக் கைவிடாமல் நடத்தியது வடகொரியாவின் மீது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

அணு ஆயுத சக்தி மிகுந்த நாடாக உருவாகத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதனால்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் நிலையிலும், தொடர்ந்து அணு சோதனையை நடத்திவருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வகையில் அணு சோதனை நடத்திவருவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா?                                

 அணு ஆயுத சோதனை நடத்த வேண்டாம் என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. ஆனால், ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து நடத்திவரும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா-விடம்  பல நாடுகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த அணு சோதனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி

மேலும், ஐ.நா-வின் அணு ஆயுதப் பிரிவுத் தலைவர் ரபேல் குரோசி, `வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தியிருப்பது கவலை அளிக்கிறது. இது, வடகொரியா ஆயுதத் தளவாடங்களை போருக்குத் தயார்நிலையில் வைத்திருப்பதைக் காட்டுகிறது. ஐ.நா இதை உன்னிப்பாக கவனித்துவருகிறது’ என்று தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத் தடையை விதிக்கும் சூழல் உருவாகும் எங்கின்றனர் இந்தப் பிரச்னையை உற்று நோக்குவோர்.

போர் நடக்கும் சூழல் உருவாகுமா?

1950-ம் ஆண்டு நடந்த கொரியா போரின்போது, வட கொரியா தென்கொரியா என இரு நாடுகளாக பிரிந்தன. அதன் பிறகு தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலும் பகை நிலவிவருகிறது. தென்கொரியாவை வீழ்த்த வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனையை நடத்திவருகிறது. இதனால் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவமும் இணைந்து வடகொரியாவை எதிர்க்கப் படைகளை தயார் செய்துவருகிறது.

 ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
Tom Page

இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் வடகொரியா 23 ஏவுகணைகளை தென்கொரியாவின் எல்லையை நோக்கி வீசியிருக்கிறது. அவற்றில் ஒரு ஏவுகணை இரு நாடுகளுக்கும் இடையில், அதாவது தென்கொரியாவின் சோக்சோ நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கும் கடல் எல்லையில் விழுந்திருக்கிறது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளையும் கிழக்கு கடற்பகுதியில் வீசிய வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவும் மூன்று ஏவுகணைகளை அந்த நாட்டின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி வீசியது. இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசிவரும் நிலையில், போர் உண்டாகுமா  என்ற அச்சம் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்டுவருகிறது.    

தொடர்ந்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயன்றுவரும் நிலையில், அதற்கு வடகொரியா பிடி கொடுக்கவில்லை. எனினும், வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்குவதற்கு முன்பாக அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியைக் கொண்டுவர ஐ.நா நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்குத் தீர்வாகும்.