Published:Updated:

அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா? - நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்!

அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா?

``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை!” - புதின்

அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா? - நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்!

``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை!” - புதின்

Published:Updated:
அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா?

கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா போரில் உச்சகட்டமாக, இரு தரப்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் உண்மை நிலை என்ன?

அணு ஆயுதப் போர்
அணு ஆயுதப் போர்
ட்விட்டர்

அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப்போகிறதா உக்ரைன்?

போர் நடவடிக்கையில் உக்ரைன் `டர்டி பாம்' (Dirty Bomb) எனும் அணுக்கழிவு குண்டுகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. இதை, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு(Sergei Shoigu) அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தெரிவித்தார். அதேபோல, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அணு ஆயுத பாதுகாப்புப் படையின் தலைவர் இகோர் கிரில்லோ, ``சக்தி குறைந்த அணு ஆயுதங்களை உக்ரைன், ரஷ்யவுக்கு எதிராகப் பயன்படுத்தவிருக்கிறது. அணு ஆயுத தாக்குதலுக்கு உக்ரைன் தயாராவதை அறிந்தால் ரஷ்யா உடனடியாக எதிர்வினை ஆற்றும் என்பதால், அதை வைத்து ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளைத் திருப்பவும் அந்த நாடு திட்டமிட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்யாவுக்கான ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியாவும், `உக்ரைன் டர்டி பாம் அணுக்கழிவு குண்டுகள் பயன்படுத்துவதை அணுசக்தி பயங்கரவாதச் செயலாக நாங்கள் கருதுவோம்' என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். மேலும், இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்-க்கும் புகார் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு
Savitsky Vadim - Wikipedia

உக்ரைன் ஆதரவு நாடுகள் மறுப்பு:

ஆனால் ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் முற்றிலுமாக நிராகரித்திருக்கின்றன. மேலும், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் தங்களின் போர் நடவடிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றே சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றன. அதேசமயம், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், ``ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் கடும் பின்விளைவுகளால் உக்ரைன் அணுக்கழிவு குண்டுகளைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும்" என சூசகமாகத் தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்
ட்விட்டர்

ரஷ்யாவின் திட்டம் என்ன?

போர்த் தொடங்கிய ஒரே வாரத்தில் தங்கள் நாட்டின் அணு ஆயுதப் படை தயார் நிலையில் இருப்பதாக புதின் எச்சரிக்கை விடுத்தார். கடந்த மாதம் ரஷ்ய மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய புதின், ``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை! அணு ஆயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என அதிரடியாகத் தெரிவித்தார்.

அதாவது `அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்' என்பதைத்தான் அப்படித் தெரிவித்தார். அப்போதே ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், ``புதினின் மறைமுக மிரட்டலை நாம் சாதரணமாக எடுக்கொள்ளக் கூடாது. ஒருவர் பொய் சொல்லவில்லை என்று கூறும்போதே அதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

அணு ஆயுத போர் ஒத்திகை: ஆய்வு செய்த புதின்!

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 26) ரஷ்யா, தனது அணு ஆயுதத் தடுப்பு படையின் போர் ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தியது. இதில், ரஷ்யாவின் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படைப்பிரிவுகளுமே ஈடுபட்டது. குறிப்பாக, அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள், குறைந்த உயரத்தில் அதிவேகமாகப் பறந்து விமானப்படை, கடற்படை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் சோதனை நடைபெற்றது.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்
Pavel Byrkin

மேலும், இந்த போர் ஒத்திகையை ரஷ்ய அதிபர் புதின் மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன. அதேசமயம், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ``ரஷ்யா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது" என போர் ஒத்திகையை நியாயப் படுத்தியிருக்கிறார்.

அமெரிக்கா, இந்தியா சொல்வது என்ன?

`இது ரஷ்யாவின் வழக்கமான வருடாந்திர பயிற்சிதான். இதை ரஷ்யா திடீரென ஆத்திரமூட்டும் வகையில், அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடப்போவதாக கருதத்தேவையில்லை. ரஷ்யா ஏற்கனவே இதுகுறித்து தங்களிடம் தெரிவித்திருக்கிறது" என அமெரிக்கா விளக்கமளித்திருக்கிறது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

அதேபோல, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``அணு ஆயுதத் தாக்குதல் மனிதத்தன்மைக்கே எதிரானது என்பதால், எந்த தரப்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. மோதல் ஏற்படுவதற்கு முன்பாக, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கான பாதையை தேர்வு செய்யவேண்டும்" என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

எப்போது முடிவுக்கு வரும் இந்தப் போர்?