Published:Updated:

`வைரஸ் பற்றி முன்னரே அதிபருக்குத் தெரியும்!?’ - சீனாவில் பரவும் புதிய சர்ச்சை #corona

அதிபர் ஜி ஜின்பிங்
அதிபர் ஜி ஜின்பிங்

கொரோனா வைரஸ் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே அதிபருக்கு அதுபற்றித் தெரியும் என்னும் தகவல் சீனா முழுவதும் பரவிவருகிறது.

கொரோனா வைரஸ் அச்சம் நாளுக்கநாள் உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து தொடங்கியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் தற்போது 20-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 1700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 70,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் தினம் தினம் அதிகரிக்கும் இந்த வைரஸ் தொற்றால் மொத்த நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதிகள் போன்றவை நலிவடைந்துள்ளன. சீனாவில் தயாரான பொருள் என்றால் பிற நாட்டினர் வாங்கவே அஞ்சுகின்றனர். சீனாவிலிருந்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. மேலும் நாடு முழுவதும் வைரஸ் தொற்று இருப்பதால் வெளிநாட்டினர் யாரும் சீனாவுக்கு வருவதில்லை. இதனால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

அதேபோல் ஏற்கெனவே சீனாவிலிருந்த பிற நாட்டு மக்களும் அவசரமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உள்நாட்டிலேயே மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பதால் அலுவலகம், தொழிற்சாலை போன்ற மனிதன் செய்யும் அனைத்து வேலைகளும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன. சீனப் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. அனைத்துத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சீனா வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சீனா
சீனா

இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம், சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிகிச்சையளிக்க பணம் செலவிட வேண்டும். அதிகப்படியான மருந்துகள், மாத்திரைகள், பிற மருத்துவ உபகரணங்கள், பிற பராமரிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு அதிக அளவில் பணம் செலவிடப்பட்டு வருகிறது. சீனாவில் கொரோனா தொற்று உறுதியான பிறகு பல கோடி ரூபாய் செலவில், வுகான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு `கொரோனா’ வைரஸ் பாதிப்பா? இது சீன குபீர்! #Coronavirus

கொரோனா வைரஸையும் சமாளித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தள்ளப்பட்டுள்ளார். இதனால் இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் அதிபர். அதில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை எப்போதும் போலக் காக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாகப் பேரழிவுக்கு வகை செய்யும் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி பரவுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா
சீனா

இந்நிலையில் தற்போது மற்றொரு புதிய சர்ச்சையும் சீனா முழுவதும் வெடித்துள்ளது. சீனாவில் கொரொனா வைரஸ் பரவியுள்ளதாக ஜனவரி 20-ம் தேதிதான் அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதிபர் அறிவித்த அடுத்த வாரம், அவரின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுவதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் ஜின்பிங், அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதாவது முதன்முதலில் அவரே கொரோனா பற்றி அறிந்திருந்ததாகச் சீனா முழுவதும் தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உண்மையில்லை, வைரஸின் நெருக்கடியான நேரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிபர் பெயருக்குக் களங்கம் விளைக்கவே இதைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதில் எது உண்மை என்ற நம்பத்தகுந்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அடுத்த கட்டுரைக்கு