Published:Updated:

ஆப்கன்: முகமது நபிகள் விவகாரம்; சீக்கியர் கோயில் மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்!

சீக்கிய கோயில் மீது தாக்குதல் ( ட்விட்டர் )

ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கன்: முகமது நபிகள் விவகாரம்; சீக்கியர் கோயில் மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Published:Updated:
சீக்கிய கோயில் மீது தாக்குதல் ( ட்விட்டர் )

ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நபிகள் நாயகத்தை அவமதித்ததற்கு பதிலடி என்றும் கூறியுள்ளது.

பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக் கருத்து இந்தியா மட்டுமில்லாமல், உலக நாடுகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சீக்கிய கோயில் மீது தாக்குதல்
சீக்கிய கோயில் மீது தாக்குதல்
ட்விட்டர்

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காபூலில் உள்ள சீக்கிய மத கோயிலுக்குள் ஊடுருவி அதன் காவலரைக் கொன்று இயந்திர துப்பாக்கி மற்றும் கையெறிக் குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்... குறைந்தது ஏழு பேர் காயமடைந்திருக்கின்றனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு
ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மூடப்பட்ட இந்திய தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தலிபன் அதிகாரிகளுடன் இந்திய தூதுக்குழு ஆலோசிப்பதற்காக ஆப்கன் சென்றிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் அதிகாரத்திற்குத் திரும்பியதிலிருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் பல தாக்குதல்கள் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தாலிபன் போன்ற ஒரு சன்னி இஸ்லாமியக் குழுவாக இருந்தாலும், கருத்தியல் அடிப்படையில் தாலிபன்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் பெரிதும் வேறுபடும் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism