Published:Updated:

இத்தாலி: ஆதரவை விலக்கிக்கொண்ட கூட்டணிக் கட்சிகள்... பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மரியோ டிராகி!

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ( ட்விட்டர் )

கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், மரியா டிராகி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இத்தாலி: ஆதரவை விலக்கிக்கொண்ட கூட்டணிக் கட்சிகள்... பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மரியோ டிராகி!

கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், மரியா டிராகி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Published:Updated:
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ( ட்விட்டர் )

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடுகிறது. அதிலிருந்து மீள முடியாமல் அந்த நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில், இத்தாலியிலும் பொருளாதார நெருக்கடி சூழல் நிலவிவருகிறது.

தற்போது இத்தாலியில் பணவீக்கம், எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவி வருவதால், அங்குப் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், அண்மையில் கூட்டணிக் கட்சியினர் பிரதமர் மரியோ டிராகிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர்.

இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி
இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து இத்தாலி நாடாளுமன்றத்தில் மரியா டிராகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது. கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், மரியா டிராகி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதிபர் செர்ஜியோ மெட்டரல்லா அதை ஏற்கவில்லை. இருப்பினும் மக்கள் போராட்டம் வலுத்ததால் மரியோ டிராகி பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இவர் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகியின் விலகல் இத்தாலி மற்றும் ஐரோப்பாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!