Published:Updated:

`அது வெறும் காய்ச்சல் அல்ல... அமெரிக்கா மீதான அட்டாக்..!’ - ட்ரம்ப் காட்டம் #Corona

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

ஹாட்ஸ்பாட்களாக அறியப்பட்ட பகுதிகளில் தற்போது எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது, கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.' - ட்ரம்ப்

கொரோனா வைரஸ், அமெரிக்காவில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 25,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா லாக் டெளன் உத்தரவுகளைத் தளர்த்தும் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா
கொரோனா

கொரோனா தொடர்பாகத் தினமும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ட்ரம்ப். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். அமெரிக்காவில் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டின் கடனும் அதிகரிக்கிறது. இது தொடர்பாகச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார்.

ட்ரம்ப், ``நமக்கு வேறு வழி இல்லை. வேறு வழி இருக்கிறதா..? இருந்தால் சொல்லுங்கள். அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறேன். நாம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். உலகிலே சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டவர்கள் நாம். சீனாவைவிட சிறந்தது நமது பொருளாதாரம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் இந்தப் பொருளாதாரத்தை கட்டமைத்தோம். பின்னர், ஒருநாள் அனைத்தையும் மூட வேண்டும் என்றார்கள். தற்போது மீண்டும் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அப்படித் திறக்கும்போது முன்பைவிட அதிக பலத்துடன் மீண்டும் திரும்புவோம்.

உண்மையில், நாம் தாக்கப்பட்டோம். இது நிச்சயம் ஒரு அட்டாக்தான். இது வெறும் காய்ச்சல் மட்டும் கிடையாது. எவரும் இது போன்ற ஒரு விஷயத்தைக் கண்டதில்லை” என்றார். தொடர்ந்து பேசியவர், தற்போது அமெரிக்காவில் நிலைமை சீராகி வருகிறது என்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

``ஹாட்ஸ்பாட்களாக அறியப்பட்ட பகுதிகளில் தற்போது எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது, கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பல முக்கிய நகரங்கள் விரைவில் பாதுகாப்பான நிலையில் செயல்படத் தொடங்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு