Published:Updated:

`என் தந்தை மீண்டும் அதிபரானால் வெள்ளை மாளிகையில் இருக்க மாட்டேன்!’ - இவான்கா ட்ரம்ப்

இவான்கா - ட்ரம்ப்
இவான்கா - ட்ரம்ப்

`என் தந்தை மீண்டும் அதிபரானால் நான் வெள்ளை மாளிகைப் பணிகளைச் செய்ய மாட்டேன்’ என ட்ரம்ப்பின் மகள் இவான்கா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அதிபர் பதவிக்குக் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடவுள்ளனர். தேர்தல் பிரசாரங்கள் தற்போதே அமெரிக்கா முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பிற நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அவர், பதவி விலகுவதற்கான மசோதா அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அந்த மசோதா செனட் சபைக்குச் செல்லவுள்ளது. இதனால் இந்த முறை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`14 மணி நேர விவாதம்; எதிராக 198; ஆதரவு 229!' - நிறைவேறியது அதிபர் ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்

இந்நிலையில், தன் தந்தை மீண்டும் அதிபரானால் வெள்ளை மாளிகைப் பணிகளில் இருக்க மாட்டேன் என இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகளும் வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் இருப்பவர் இவான்கா ட்ரம்ப்.

அமெரிக்க ஊடகமான சிபிஎஸ்ஸுக்கு பேட்டியளித்திருக்கிறார் இவான்கா. அப்போது, ``மீண்டும் உங்கள் தந்தை அதிபரானால் அரசாங்க பணிகளில் நீடிப்பீர்களா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

இவான்கா
இவான்கா

அதற்கு, ``என் குழந்தைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியே என்னை முழுமையாக இயக்குகிறது. எனவே, தாய்மைதான் எப்போதும் முன்னுரிமையாக இருக்கும். என் முடிவுகள் எப்போதும், குழந்தைகளின் தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நெகிழ்ச்சியானதாக இருக்கும். இந்த முடிவும் குழந்தைகளை முன்வைத்தே இருக்கும். எனவே, 2020-ல் என் தந்தை மீண்டும் அதிபரானால் நான் வெள்ளை மாளிகைப் பணிகளில் ஈடுபட மாட்டேன்.

அமெரிக்காவுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். ஆனால், இது போதுமானதாக இல்லை. நான் கடந்த 2 வருடங்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களுக்குப் பயணப்பட்டுள்ளேன். அப்போது பலவிதமான ஆண்கள் மற்றும் பெண்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இவான்கா - ட்ரம்ப்
இவான்கா - ட்ரம்ப்

என் பணியில் ஒவ்வொரு நாளையும் மிகச் சிறந்ததாகவே நான் உணர்கிறேன். ஏனெனில், மக்களுக்காக வேலை செய்யும் அதிகாரத்தை அதிபர் எனக்கு வழங்கியுள்ளார். ஆனால், உண்மையில் என்னைப் பொறுத்தவரை அரசியல் சற்று சுவாரஸ்யமானதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு