Published:Updated:

"என் தந்தையை நேசிக்கிறேன்... ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை" - ட்ரம்ப் மகள்

இவான்கா ட்ரம்ப் ( ட்விட்டர் )

``இந்த நேரத்தில் நான் என்னுடைய குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்திருக்கிறேன்." - இவான்கா ட்ரம்ப்

"என் தந்தையை நேசிக்கிறேன்... ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை" - ட்ரம்ப் மகள்

``இந்த நேரத்தில் நான் என்னுடைய குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்திருக்கிறேன்." - இவான்கா ட்ரம்ப்

Published:Updated:
இவான்கா ட்ரம்ப் ( ட்விட்டர் )

2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதை உறுதிசெய்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று, ``அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கிறேன். வரும் 2024-ம் ஆண்டு, மீண்டும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இவான்கா - ட்ரம்ப்
இவான்கா - ட்ரம்ப்
ட்விட்டர்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நான் என் தந்தையை மிகவும் நேசிக்கிறேன். என் தந்தை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. இந்த நேரத்தில் நான் என்னுடைய குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்திருக்கிறேன். நான் எப்போதும் என் தந்தையை நேசிப்பேன், ஆதரிப்பேன்.

இவான்கா ட்ரம்ப் அவர் குடும்பத்தினருடன்
இவான்கா ட்ரம்ப் அவர் குடும்பத்தினருடன்
ட்விட்டர்

இனி வரும் நாள்களிலும் அரசியல் அரங்குக்கு வெளியிலிருந்து அதைச் செய்வேன். அவருடைய தேர்தல் பிரசாரத்தில் நான் பங்குபெறப் போவதில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ட்ரம்ப் அதிபர் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டபோதும்கூட இவான்கா அதில் கலந்துகொள்ளவுமில்லை. இதற்கு முன்னதாக, இவான்கா ட்ரம்ப், அவருடைய கணவர் ஜாரேட் குஷ்னர் இருவரும், ட்ரம்ப் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.