Published:Updated:

``இளைஞர்கள் குடிக்காமல் இருந்தால் நாட்டுக்கு எப்படி வருமானம் வரும்?''- ஜப்பான் அரசின் நூதன போட்டி!

drinking ( pixabay )

இந்தப் போட்டியில் 20 முதல் 39 வயதுடையவர்கள் ஜப்பானின் பீர், விஸ்கி மற்றும் ஒயின் போன்றவற்றைத் தங்களுடைய சகாக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் வகையில், கவர்ச்சிகரமான புதுவித யோசனைகளின் புரொபோசலோடு வருமாறு அறிவித்துள்ளது.

குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். ஆனால், ஒரு குடிமகன் குடிக்காமல் இருந்தால் அது நாட்டின் வருமானத்தைக் கெடுக்கும் என இளைய தலைமுறையைக் குடிக்க வைக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டு வருகிறது.

மது
மது
pixabay

அதாவது, ஜப்பானில் வசிக்கும் இளைய தலைமுறையினர், அவர்களின் பெற்றோர்கள், மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடுகையில் குறைவாகவே மது அருந்துகின்றனர். கொரோனா தொற்றின்போது பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர்.

இந்தப் போக்கை மாற்றுவதற்கு அந்நாட்டின் தேசிய வரி நிறுவனம், சேக் விவா (Sake Viva) என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் குடிப்பழக்கத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றி, பெரும்பாலான இளைஞர்களை குடிப்பழக்கத்துக்குத் திருப்ப வைக்கும் என நம்பப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் போட்டியில், 20 முதல் 39 வயதுடையவர்கள் ஜப்பானின் பீர், விஸ்கி மற்றும் ஒயின் போன்றவற்றைத் தங்களுடைய சகாக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் வகையில், கவர்ச்சிகரமான புதுவித யோசனைகளின் புரொபோசலோடு வருமாறு அறிவித்துள்ளது.

மது
மது
pixabay

நாட்டின் வரி வருவாய்க்காக குடிமக்களின் உயிரையே பணயம் வைக்கும் ஜப்பானின் இந்தச் செயலுக்கு கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மற்றொருபுறம் போட்டியில் கலந்துகொள்வதற்கு சிலர் தங்களுடைய யோசனைகளை பட்டை தீட்டி ஆன்லைனில் பதிவிட்டு வருகின்றனர்.