Published:Updated:

``ரஷ்யப் படையுடன் அமெரிக்கப் படைகள் நேரடியாக மோதாது, ஆனால்..." - நாடாளுமன்றத்தில் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தீவிரமாகப் போர் நடந்துவருவதால், அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடைவிதிப்பதாக அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் கூறியுள்ளார்.

``ரஷ்யப் படையுடன் அமெரிக்கப் படைகள் நேரடியாக மோதாது, ஆனால்..." - நாடாளுமன்றத்தில் ஜோ பைடன்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தீவிரமாகப் போர் நடந்துவருவதால், அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடைவிதிப்பதாக அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் கூறியுள்ளார்.

Published:Updated:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஆறு நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. இதனால் ஏராளமான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டது மட்டுமல்லாமல், பல லட்சம் உக்ரேனிய மக்கள் அகதிகளாக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் போர் குறித்து, "உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷ்யப் படையுடன் அமெரிக்கப் படைகள் நேரடியாக மோதாது" என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது உரையில் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய பைடன், "உக்ரைன் சுருண்டுவிட்டால், உலகமே சுருண்டுவிடும் என்று அதிபர் புதின் நினைத்தார். ஆனால் மாறாக, நினைத்துப் பார்க்க முடியாத எதிர்த்தரப்பின் வலிமையைச் சந்தித்தார். உக்ரேனிய மக்களையும் எதிர்கொண்டார்.

 உக்ரைன் போர்
உக்ரைன் போர்

அமெரிக்க நீதித்துறை, ரஷ்யக் குழுக்களின் குற்றங்களுக்காகவே ஒரு சிறப்புக்குழுவை அமைத்து வருகிறது. அவர்களின் படகுகள், அவர்களின் சொகுசுக் குடியிருப்புகள், அவர்களின் தனியார் ஜெட் விமானங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைக் கைப்பற்றுவதற்காக நாங்கள் எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைகிறோம். உக்ரேனியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து நாங்கள் ராணுவ உதவி, பொருளாதார உதவி, மனிதாபிமான உதவி ஆகிய ஆதரவை வழங்குகிறோம். உக்ரேனிய மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து உதவுவோம்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

மேலும், "இந்த சகாப்தத்தின் வரலாறு எழுதப்படும்போது, அதில் உக்ரைன் மீதான புதினின் போர் ரஷ்யாவை பலவீனமாகவும், ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற உலகப் பகுதிகளை வலுவானதாகவும் காட்டும்" எனவும் பைடன் பேசியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism