Published:Updated:

கனடா: ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாகப் பிரதமராகிறார்! ஆட்சியைத் தக்கவைத்தது லிபரல் கட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் 2019 தேர்தலைப் போன்றே நெருக்கடியான சூழலில் லிபரல் கட்சி இந்த முறையும் ஆட்சியமைத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கனடாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெருமான்மை கிடைக்காமல்போனது. அந்த நேரத்தில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மற்ற சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. லிபரல் கட்சியின் சார்பில் கனடா பிரதமராக 2015-ல் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, 2019-ல் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமரானார். கனடாவில் நாடாளுமன்ற பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எனினும், 2019-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காததால் மீண்டும் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்று, ஆட்சியமைக்க ஜஸ்டின் ட்ரூடோ விரும்பினார்.

பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Sean Kilpatrick

அதன் காரணமாக, கனடாவில் இடைத்தேர்தலை அறிவித்து தனது லிபரல் கட்சியைத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தினார். 2015-ம் ஆண்டு தொடங்கி ஆறு வருடகாலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்கொள்ளும் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் கனடாவில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

லிபரல் கட்சியின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோ குயிபெக் மாகாணத்தின் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்டார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டதுபோல நேற்றைய தினம் கனடாவில் மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த கையுடன் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது, ஆளும் லிபரல் கட்சி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்தது. பல தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அந்தக் கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவும் தான் போட்டியிட்ட பாப்பிநவ் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், மொத்தமுள்ள 338 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை லிபரல் கட்சி தக்க வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கனடா: இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தல்... ஏன்? - மீண்டும் ஆட்சியமைப்பாரா ஜஸ்டின் ட்ரூடோ?!
ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ
Adrian Wyld

ஆனால், கனடாவின் மற்ற பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, பிளாக் குயிபிக்கோயிஸ் உள்ளிட்ட கட்சிகள் லிபரல் கட்சியைவிடவும் மிகக் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால், லிபரல் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக கனடா பிரதமராகப் பதவி ஏற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கனடா நாடாளுமன்றத் தேர்தல் குறித்து செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படியே, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் நெருக்கடியான சூழலில் 2019 தேர்தலைப் போன்றே லிபரல் கட்சி இந்த முறையும் ஆட்சி அமைக்கவிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு