Published:Updated:

ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... திடீர் துப்பாக்கிச்சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்

காபூல்
காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில், அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டினர், பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேற முயன்றுவருகிறனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் மக்கள் பெருமளவில் கூடினர்.

ஆப்கன்
ஆப்கன்

இந்தநிலையில், காபூல் விமான நிலையத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது தாலிபன். மேலும், அனைத்து வெளிநாட்டுக்குமான விமான சேவையை ரத்துசெய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க இன்று மதியம் டெல்லியிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லவிருந்த விமானம், தற்போது செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

`தாலிபன்கள் வசமான ஆப்கன்... வெளியேறிய அதிபர் கனி; நாட்டின் பெயர் மாற்றம்?’ - தற்போதைய நிலை என்ன?
தாலிபன்
தாலிபன்

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது வரை இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆப்கனிலிருந்து வெளியேற விரும்பும் மக்களைத் தடுக்கக் கூடாது எனப் பல நாடுகளின் தலைவர்கள் தாலிபனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது காபூல் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், பல்வேறு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு