Published:Updated:

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: கணவருடன் வீடியோ கால்... ஏவுகணைத் தாக்குதலில் கேரளப் பெண் பலி!-நடந்தது என்ன?

செவிலியர்

90% ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வானிலேயே தகரக்கப்பட்டன. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: கணவருடன் வீடியோ கால்... ஏவுகணைத் தாக்குதலில் கேரளப் பெண் பலி!-நடந்தது என்ன?

90% ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வானிலேயே தகரக்கப்பட்டன. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன.

Published:Updated:
செவிலியர்

இஸ்ரேல் - பாலஸ்தீன தரப்பினருக்கான மோதல், கடந்த சில தினங்களாகவே ருத்ர தாண்டவமாக ஆகிவருகிறது. முற்றுப்புள்ளிகள் ஏதுமின்றி இரு தரப்புக்குமான தாக்குதல் பதிலுக்கு பதில் என்று நீண்டு கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் மரணமடைந்தவர்கள், காயப்பட்டவர்களின் நிஜ எண்ணிக்கை இன்னும் சரிவரத் தெரியவில்லை.

பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் - பாலஸ்தீனம்:

இஸ்ரேலின் ஜெருஸலேமிலுள்ள அல்-அக்‌ஷா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை அன்று மோதல் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல்
இஸ்ரேல்
Hatem Moussa

பதிலுக்கு பதில் கொடுப்போம் என்று ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக் கட்டடமான காசா முனைப் பகுதியில் இருந்த 13 மாடிக் கட்டடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு ஹமாஸ் அமைப்பினர் வான்வெளித் தாக்குதலாக 130 சிறிய ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தொடுத்துள்ளனர்.

அவற்றில் 90% ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினரால் வானிலேயே தகர்க்கப்பட்டன. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரை 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாக்குதல்
தாக்குதல்
Ariel Schalit

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் பலி:

இதில் குறிப்பாக, இந்தியாவின் கேரளா மாநிலம், இடுக்கியின் கஞ்ச்குஷி பஞ்சாயத்தைச் சேர்ந்த சேர்ந்த செவிலியரான சௌமியா (31) ஏவுகணையிலிருந்து வெடித்த சில பாகங்கள் கட்டடத்தின் மீது விழுந்ததில் கட்டடம் இடிந்து அதில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். அங்கு அஷ்கிலான் நகரில் வசித்துவந்த அவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டி ஒருவருக்கு பராமரிப்புப் பணிகளைச் செய்துவந்திருக்கிறார். சம்பவம் நடந்த நாளன்று சௌமியா தனது கணவர் சந்தோஷுடன் வீடியோ காலில் பேசிவந்திருக்கிறார். அப்போது, திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: கணவருடன் வீடியோ கால்... ஏவுகணைத் தாக்குதலில் கேரளப் பெண் பலி!-நடந்தது என்ன?

இதனால் பதற்றமடைந்த சந்தோஷ் அங்கு அருகிலுள்ளவர்களை அழைத்து விசாரத்ததில் இது போன்ற சம்பவம் அரங்கேறியது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து மீளா துயரத்தோடு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சௌமியா இந்தியாவுக்கு வந்தவர் தனது குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு இஸ்ரேல் திரும்பியிருக்கிறார். மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருந்தார். சௌமியாவுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இஸ்ரேல்
இஸ்ரேல்
Khalil Hamra

இந்தியாவைச் சேர்ந்த சௌமியாவின் மரணத்துக்கு இஸ்ரேல் அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. அவருடைய குடும்பத்தினரிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுவரையிலும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மூலம் வரம்பு மீறி செயல்பட்டுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாகச் சாடியுள்ளார்.

தாக்குதலின் பின்னணி என்ன?!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையானது முதலாம் உலகப் போரின் முடிவிலிருந்தே தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான மோதல் ஆரம்பமாகிவிட்டது. இரு தரப்பினரும் ஜெருஸலேத்தின் நிலப்பரப்பை தங்களுக்கு உரிமைகோரி போராடி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்துவரும் இஸ்ரேல் அங்குள்ள இஸ்லாமியர்களை விரட்டியடித்துவருகிறது. இதனால் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாகவே முத்திரை குத்திவைத்துள்ளது இஸ்ரேல் அரசாங்கம். இதுவே பதிலுக்கு பதில் போராக இன்றும் இடைவிடாது வெடித்துக்கொண்டிருக்கிறது.

தாக்குதல்
தாக்குதல்

கடந்த 1967-ம் ஆண்டு ஜெருஸலேமின் ஓல்டு சிட்டியை (Old City) இஸ்ரேல் கைப்பற்றியதன் நினைவாக அங்கே பெரிய அளவிலான பேரணியாக நடத்த திட்டமிட்டிருந்தது.

தற்போது, ரமலான் காரணமாக இஸ்லாமியர்கள் அங்கேயுள்ள அல்-அக்‌ஷா மசூதியில் வழிபாடு நடத்திவருகின்றனர். இந்தநிலையில், மசூதியினுள் இஸ்லாமியர்கள் கற்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பேரணியில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறி அங்கு இஸ்ரேல் ராணுவத்தினரும், போலீஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் நீட்சியாகவே தற்போது என்றும் இல்லாத அளவுக்குத் தாக்குதல் தொடர்ந்துவருகிறது.

தாக்குதல்
தாக்குதல்
Heidi levine

இதுவரை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒருபுறம் உலகமெங்கும் கொரோனா தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில், இது போன்ற மனிதநேயமற்ற தாக்குதல்களால் கொத்துக் கொத்தாக உயிர்கள் பறிபோவது நெஞ்சங்களை உருக்குலையவைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism