Published:Updated:

`அணு ஆயுதங்களை மேம்படுத்தும் வட கொரியா?’ - மீண்டும் பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன் ( AP )

வட கொரிய அதிபரின் உடல்நிலை தொடர்பான சர்ச்சைகள் அடங்கிய நிலையில் மீண்டும் பொதுவெளியில் தோன்றியுள்ளார் கிம் ஜாங் உன்.

கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்த நேரத்திலும் வட கொரியாவில் நடக்கும் விஷயங்கள் சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறுகின்றன. கடந்த மாதம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும் மாயமானதாகவும் வெளியான செய்தி, கொரோனாவைத் தாண்டி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவைசிகிச்சை நடந்ததாகவும் அது தோல்வியடைந்ததால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் பல வதந்திகள் பரவின.

தொழிற்சாலை திறப்பில் கிம் ஜாங் உன்
தொழிற்சாலை திறப்பில் கிம் ஜாங் உன்
AP

இதையடுத்து, வட கொரிய அதிபரின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள பல நாடுகளும் முனைப்புக்காட்டின, இறுதியாக ஓர் உரத் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. இதற்குப் பிறகே கிம் உயிரிழப்புத் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கிம் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகச் செய்தி வெளியிடப்பட்டு 20 நாள்கள் கடந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`தொழிற்சாலை திறப்பு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!’ - பொதுவெளியில்  தோன்றினார் கிம் ஜாங் உன்

நேற்று வட கொரியாவில் நடந்த ஒரு முக்கிய ராணுவக் கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, நாட்டின் ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிறநாட்டிலிருந்து வரும் அச்சுறுதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிப்பது தொடார்பாக விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

வட கொரிய ராணுவத்தின் தலைவர் கிம் ஜாங் உன், துணை தலைவர் பாக் ஜாங் சோன், ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் வட கொரியாவின் ராணுவ மன உறுதியை உயர்த்துவதற்கு ஒரு வெளிப்படையான முயற்சியாக 12-க்கும் அதிகமான ராணுவ தளபதிகள் மற்றும் வீரர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக கே.சி.என்.ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

வட கொரியா அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தன் நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

`சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை’ - கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்குத் தென்கொரியா முற்றுப்புள்ளி
அடுத்த கட்டுரைக்கு