Published:Updated:

`I am Back' மோடில் கிம் ஜாங் உன்; 2014 கனெக்‌ஷன்! -உரத் தொழிற்சாலை பின்னணியில் யுரேனியம் உற்பத்தி?

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கிம் ஜாங் உன், தன் தாத்தாவும் வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான கிம் இல் ஜாங்கின் பிறந்ததின விழாவில் பங்கேற்கவில்லை. இதனால், அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவின.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிருக்குப் போராடுவதாகத் தகவல் வெளியான நிலையில், பொது நிகழ்ச்சியில் மீண்டும் அவர் தோன்ற ஆரம்பித்துள்ளார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கிம் ஜாங் உன், தன் தாத்தாவும் வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான கிம் இல் ஜாங்கின் பிறந்ததின விழாவில் பங்கேற்கவில்லை. இதனால், அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், கிம் ஜாங் உயிருக்குப் போராடுவதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வடகொரிய அதிபர் உடல் நிலை குறித்து பல்வேறு ஊகச் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இந்தச் செய்திகளுக்கு வடகொரியா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, மூன்று வாரங்களுக்குப் பிறகு, பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜாங் உன், ஷான்ஷன் என்ற இடத்தில் உரத் தொழிற்சாலையை திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கைளை வடகொரிய அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் வடகொரிய அதிபர், ரிப்பன் வெட்டி உரத் தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார். அருகில் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் உள்ளார். மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

முன்னதாக, அதிக உடல் எடை, சிகரெட் புகைப்பது மன அழுத்தம் காரணமாக வடகொரிய அதிபருக்கு உடல் நிலை மோசமானதாகவும் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வடகொரியாவின் கடற்கரை நகரான வூன்ஸானில் தன் ரிசார்ட் பங்களாவில் அவர் ஓய்வு எடுப்பதாகச் சொல்லப்பட்டது. தற்போது, 36 வயதான கிம் ஜாங்குக்குப் பதில் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் வடகொரியாவை நிர்வகித்து வருவதாகத் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங்குக்கு ஏதோ நடந்துவிட்டது என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் கிம் ஏதும் நடக்காதது போல மீண்டும் தோன்றுவதும் அடிக்கடி நிகழ்வதுதான்.

கடந்த 2011-ம் ஆண்டு கிம் ஜாங் வடகொரியாவில் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்துதான் வெளியுலகுக்கு அவரின் புகைப்படங்கள் பரவத் தொடங்கின. பெரும்பாலும் ஒரே விதமான உடையில்தான் அவர் காட்சியளிப்பார். ஷான்ஷன் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களிலிருந்து உடல்நிலை கோளாறு காரணமாக அவருக்கு எந்தவிதமான உடல் மெலிவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வழக்கமாக அவர் அணியும் மாவோ சூட் அணிந்து, புதிய முடி வெட்டுடன் காட்சியளித்தார்.

கிம் ஜாங் ரயில்
கிம் ஜாங் ரயில்

ஷான்ஷன் உரத் தொழிற்சாலை திறப்பு விழாவின்போது, கிம் ஜாங்கின் தங்கை கிம் யோ உடனிருந்தார். கிம் ஜாங் தன்னுடன் சகோதரியை வைத்திருந்தது, தனக்கு அடுத்த இடத்தில் அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதுபோல அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், வடகொரியா இன்னும் தன் ஆளுமையின் கீழ்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் கிம்மின் புகைப்படங்கள் இருப்பதாகவும் ஊகிக்கப்பட்டுள்ளது.

ஷான்ஷன் தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம்முடன் பல மூத்த வடகொரிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிலொருவர் மாஸ்க் அணிந்திருந்தார். இதனால், வடகொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக, கிம் ஜாங்கின் மெய்க்காப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, கிம் ஜாங் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கலாம். இதற்காக, வடகொரியாவின் அழகிய கடற்ரை நகரமான வூன்ஸானை தேர்வு செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

உரத் தொழிற்சாலையை சுற்றி பார்த்த கிம்
உரத் தொழிற்சாலையை சுற்றி பார்த்த கிம்

வடகொரிய அதிபர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ரயிலில் செல்வதைப் பழக்கமாகக் கொண்டவர். கிம்மின் பிரத்யேக ரயிலுக்கு `பச்சை ரயில்' என்று பெயர். ரஷ்யா, சீனா, வடகிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வடகொரிய அதிபர்கள் இந்த ரயிலில்தான் பயணம் மேற்கொள்வார்கள். வூன்ஸான் நகரில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. வூன்ஸான் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைப்பது போன்ற சாட்டிலைட் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தன. இதனால், ஏதோ ஒரு காரணங்களுக்காக கிம் ஜாங், வூன்ஸான் நகருக்கு சென்றிருக்கிறார் ஆனால் அது எதற்காக என்பதுதான் இப்போது உலக நாடுகளின் ஒரே சந்தேகம். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இதேபோல 30 நாள்கள் கிம் ஜாங் காணாமல் போய்விட்டார். அப்போது, காலில் ஏற்பட்ட வாத நோய்க்காக அவர் சிகிச்சைப் பெற்றதாக சொல்லப்பட்டது. குணமடைந்து மக்கள் மத்தியில் ஒரு பிரத்யேக வாகனத்தில் வந்துதான் காட்சியளித்தார்.

`அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதரவு!’ - ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா

தற்போது, ஷான்ஷன் உரத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கவும் அதேபோன்ற வாகனத்தையே கிம் ஜாங் உன் பயன்படுத்தியுள்ளார். இதனால், கிம்முக்கு உடலில் ஏதோ பிரச்னை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டது உரத் தொழிற்சாலையா அல்லது யூரேனியம் உற்பத்தி செய்யும் பகுதியா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அல்லது இரட்டை நோக்கங்களுக்காக இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு