Published:Updated:

போயிங் 757 கதவுகள், செல்லப் பெயர் கப்பல்.. ஆனால் இது ட்ரம்ப்பின் பீஸ்ட் கார்! #VikatanInfographics

The Beast
The Beast

கண்ணாடி மற்றும் பாலிகார்பனேட் அடுக்குகள் கொண்ட இதன் கண்ணாடி 5 இன்ச் அடர்த்திகொண்டது. காரின் கதவுகள் மற்றும் முன் அமைப்பானது 8 இன்ச் அடர்த்தியைக் கொண்டுள்ளது. எனவே, தோட்டா மற்றும் குண்டுகளால்கூட காரைத் துளைக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பானது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகிறார். இதற்குமுன், 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்தார். அன்று, இந்தியப் பிரதமர் மோடியுடன் `மன் கி பாத்' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஒபாமாவுக்குப் பிறகு, டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி மெலானியாவுடன் வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இருநாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அகமதாபாத் விமான நிலையத்தில் இறங்கும் அவர், சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், அகமதாபாத்தில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில், கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தைத் திறந்து வைக்கிறார்.

ட்ரம்ப் இந்தியா வரும்போது அவருடன் அணிவகுத்து செல்லக்கூடிய பாதுகாப்பு வாகனங்கள் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் நேற்று (18/02/2020) காலை அகமதாபாத் வந்தது. இந்தியாவின் சுற்றுப் பயணத்தில், ட்ரம்ப் பயன்படுத்தும் பிரத்யேக பீஸ்ட் காரின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்
இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

அமெரிக்க அதிபருக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கார் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கறுப்பு நிறத்தில் குட்டிக் கப்பல்போல இருக்கும் இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் 14.15 கோடி ரூபாய். 18 அடி நீளமும், 5.85 அடி உயரமும், 8 டன் எடையையும் கொண்டது இது. இந்த காரை, கேடிலாக் ஒன் (Cadillac One), ஃப்ரஸ்ட் கார் (First Car), ஸ்டேஜ்கோச் (Stagecoach) என்றெல்லாம் அழைக்கின்றனர். ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு இருக்கைகளைக் கொண்டது.

பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்
`உடனடியாகக் குடிசைகளைக் காலி செய்யுங்கள்!’ - ட்ரம்ப் வருகையால் தவிக்கும் அகமதாபாத் மக்கள்

ஸ்டீல், அலுமினியம், செராமிக் ஆர்மர் போன்ற பொருள்களை உபயோகித்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த கார். கண்ணாடி மற்றும் பாலிகார்பனேட் அடுக்குகள் கொண்ட இதன் கண்ணாடி 5 இன்ச் அடர்த்திகொண்டது. காரின் கதவுகள் மற்றும் முன் அமைப்பானது 8 இன்ச் அடத்தியைக் கொண்டுள்ளது. எனவே, தோட்டா மற்றும் குண்டுகளால்கூட காரைத் துளைக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பானது. கதவுகள் அனைத்தும், போயிங் 757 ரக விமானங்களின் கதவுகளைப் போன்றன. குண்டு வெடிப்பின்போதும் சேதமடையாத வண்ணம் அடிப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்

மேலும், `நைட் விஷன் சிஸ்டம்' உண்டு என்பதால், இரவிலும், காருக்கு முன் - பின் வரும் வண்டிகளை மிகத்துல்லியமாகப் பார்க்க முடியும். வெடிகுண்டு தாக்குதல்கள், ரசாயன தாக்குதல்கள், உயிரியல் தாக்குதல்கள் என எதுவும் காரைப் பாதிக்காது. அதேபோல், அந்நிய நபர்களால், வாகனத்தில் நுழைய முடியாதபடி, கார் எலெக்ட்ரிஃபைட் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புக்கான புகைகளை வெளியிடும் ஸ்மோக் ஸ்க்ரீன் வசதியும் இதில் உண்டு.

ஃப்ளாட் டயர்கள் இருப்பதால், எமெர்ஜென்சி காலகட்டத்திலும் 180 டிகிரியில் அதிவேகமாகத் திரும்பி காரை இயக்க முடியும். கார் பஞ்சர் ஆனாலும் நிற்காமல் செல்லும் வசதியும் உள்ளது. டயர் சிதறடிக்கப்பட்டாலும், உலோக ரிம்டுடன் இயங்கும் சக்கரம் கொண்டு உருவாக்கப்பட்டது.
பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்

அதேபோல் ஆபத்துக் காலத்தில் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க, ஓட்டுநர் இருக்கையின் அருகில் எளிதில் தகவல் தொடர்புகொள்ளும் வசதியும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் விசேஷக் கண்காணிப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. காரிலும், காரைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கும். பயிற்சி பெற்ற ரகசியப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஓட்டுநரே இயக்குவார். ஓட்டுநர்களுக்கு அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். எந்தவோர் அவசர நிலையையும் இவர்கள் எளிதில் கையாளும் திறமை பெற்றவர்கள். அதிபரின் இருக்கையில் சாட்டிலைட் போன் வசதியும் உண்டு.

இந்த காரில் அதிபருக்கான பாதுகாப்பு அம்சங்களை எடுத்துக் கொண்டால், காரில் தேவையான அளவு, பாதுகாப்பான முறையில் கொடுக்கப்படும் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. அதேபோல், முதலுதவி மட்டுமல்லாமல் தேவையான அனைத்து வகையான மருத்துவ வசதிகள் அனைத்தும், காரின் உள்ளேயே கிடைக்கும். மேலும், ஒரு தனி ஃப்ரிட்ஜ் முழுவதும், அதிபரின் ரத்த வகையைச் சேர்த்த `தானமளிக்கப்பட்ட ரத்தம்' எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்
`3 மணி நேரம்; ரூ.100 கோடி; 10,000 போலீஸ்!' - ட்ரம்ப் வருகைக்காக அதகளமாகும் அகமதாபாத்

அதிபர் பயணம் செய்யும்போது, அவர் காரின் முன்னும் பின்னும் 24 முதல் 45 வாகனங்கள் வரை பாதுகாப்புக்காக எப்போதும் செல்லும். அந்த கார்களில், பாதையை வழிகாட்டும் முன்னணி கார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள், காவல் அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள், இடையூறின்றிப் பயணம் அமையப் போக்குவரத்தைச் சரி செய்பவர்கள், பத்திரிகையாளர்கள், திடீரென ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய உதிரிப்பாகங்கள் கொண்ட கார், ரகசிய சேவை அதிகாரிகளின் ஒரு குழு, கேமரா, ரேடார், சாட்டிலைட் போன்றவற்றை மின்னணு கண்காணிப்புக் குழு, கட்டுப்பாடு & ஆதரவாளர்கள், உடனடி பதிலளிக்கும் குழு, ஐ.டி கார், சதிச்செயல்கள் மற்றும் அபாயகரமான பொருள்களை அகற்றும் குழு, தகவல் தொடர்பு குழு எனப் பலரும் அதிபருடன் பயணம் செய்வார்கள்.

பீஸ்ட்  கார்
பீஸ்ட் கார்

காரின் உள்ளே அதிபருடன், ரகசிய சேவைக் குழுவைச் சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக இருப்பார்கள். அதிபரின் காரின் அருகில், ரகசிய சேவை அதிகாரிகளின் ஒரு குழு எப்போதும் எச்சரிக்கையுடனே இருக்கும். பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஆயுள் காலம் முடிந்ததும், ரகசிய சேவை அதிகாரிகள் மூலமாக, பாகங்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டு கார் முற்றிலுமாக அழிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு