Published:Updated:

ஏர்ஃபோர்ஸ் ஒன் தெரியும்... அமெரிக்க அதிபரின் `மரைன் ஒன்' தெரியுமா?

மரைன் ஒன் ஹெலிகாப்டர்
மரைன் ஒன் ஹெலிகாப்டர் ( Shealah Craighead )

ஏர்ஃபோர்ஸ் ஒன் போலவே மரைன் ஒன் ஹெலிகாப்டரும் உலகிலேயே பாதுகாப்பு மிகுந்தது. அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தொலைவு பயணத்துக்காக மட்டுமே இந்தப் பிரத்யேக ஹெலிகாப்டர் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் குறித்து தெரியும். மரைன் ஒன் பற்றி தெரியுமா? இதுவும் அமெரிக்க அதிபரின் பறக்கும் வாகனம்தான். ஏர்ஃபோர்ஸ் ஒன் நீண்ட தொலைவு பயணத்துக்கென்றால், மரைன் ஒன் குறுகிய தொலைவு பயணங்களுக்காக அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சுமந்துகொண்டு ஏர்ஃபோர்ஸ் இன்று காலை அகமதாபாத் வந்தடடைந்தது. தொடர்ந்து 22 கிலோமீட்டர் தொலைவு நடைபெறும் ரோடு ஷோவில் டிரம்ப் பங்கேற்றார். இந்திய பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இதற்காக, அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் பிரத்யேக காரான பீஸ்ட் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் ஹெர்குலீஸ் விமானத்தில் திங்கள்கிழமை அகமதாபாத் கொண்டு வரப்பட்டன.

அகமதபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மரைன் ஒன்
அகமதபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மரைன் ஒன்

அமெரிக்க அதிபரின் பிரத்யேக ஹெலிகாப்டரான மரைன் ஒன் ஹெலிகாப்டரும் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான சி -`17 குளோப்மாஸ்டர் ரக விமானத்தில் அகமதாபாத் கொண்டு வரப்பட்டது. அகமதாபாத்தில் இன்று `நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்திலிருந்து அகமதாபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்குச் செல்ல மரைன் ஒன் ஹெலிகாப்டரை அமெரிக்க அதிபர் பயன்படுத்தினார்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் போலவே மரைன் ஒன் ஹெலிகாப்டரும் உலகிலேயே பாதுகாப்பு மிகுந்தது. அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தொலைவு பயணத்துக்காக மட்டுமே இந்தப் பிரத்யேக ஹெலிகாப்டர் இங்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்க துணை ஜனாதிபதி பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் `மரைன் டூ' என்று அழைக்கப்படும். 'மரைன் ஒன்' அதிநவீன சில்கோர்க்ஸ்கி வகை ஹெலிகாப்டராகும். 16 அடி உயரமும் 72 அடி நீளமும் கொண்டது. இந்த ஹெலிகாப்டரின் உள்ளே 200 சதுர அடி அளவுக்கு இடம் இருக்கும். 14 இருக்கைகள் கொண்டது.

இரவிலும் பறக்கும் ஹெலிகாப்டர்
இரவிலும் பறக்கும் ஹெலிகாப்டர்
`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate

கழிவறையும் இருக்கிறது. மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஹெலிகாப்டரை இயக்க தனியாக ஒரு ஸ்குவாட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் பொறுப்பு HMX-1ஸ் குவாட்ரனைச் சேர்ந்த 4 பைல்ட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஆண்டும் இந்த நான்கு பைலட்டுகளும் மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஹெலிகாப்டரில் பைலட் கேபினுக்கும் அதிபர் கேபினுக்கும் இடையே, தடுப்பு போல பிரிக்கப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர் பறக்கும் போது அதிபர் கேபினுக்குள் சிறிய சத்தம் கூட கேட்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மிக சாதாரணமாக அதிபர் பேசிக்கொண்டே செல்ல முடியும். மரைன் ஒன் பறந்தால் அதன் பாதுகாப்புக்கு 5 ஹெலிகாப்டர்கள் உடன் பறந்து செல்லும். இந்த ஹெலிகாப்டரில் 3 இன்ஜின்கள் உள்ளன. இன்ஜின்களில் ஒன்று இயங்கவில்லையென்றாலும், ஹெலிகாப்டரால் தொடர்ந்து பறக்க முடியும். சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும் ஏவுகணைகளைக் கண்டறியும் வசதி, ஏவுகணைகளை இடை மறிக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை இவற்றில் உண்டு. ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையை, பென்டகனைத் தொடர்புகொண்டு பேச முடியும்.

ஹெலிகாப்டரின் உள்பகுதி
ஹெலிகாப்டரின் உள்பகுதி
Twitter
ட்ரம்ப் விசிட்டால் இந்தியாவுக்கு என்ன ஆதாயம்? - ஓர் அலசல்

இந்த ஹெலிகாட்ரின் உடல் பகுதி ராணுவ நிறமான பச்சை நிறமும் மேல்பகுதியில் வெள்ளை நிறமும் பூசப்பட்டு, அதன் மீது அமெரிக்க தேசியக் கொடி வரையப்பட்டிருக்கும். எத்தகைய வானிலையிலும் இந்த ஹெலிகாப்டர் தடுமாறாமல் பறக்கும் திறனுடையது. போர் விமானமான எப் - 16 ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம்தான் சில்கோர்ஸ்க்கி நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். மரைன் ஒன் ஹெலிகாப்டர்கள் அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு