Published:Updated:

நுபுர் ஷர்மாவுக்கு எதிரான போராட்டம்: வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு?

குவைத் அரசு ( ட்விட்டர் )

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நுபுர் ஷர்மாவுக்கு எதிரான போராட்டம்: வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு?

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
குவைத் அரசு ( ட்விட்டர் )

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தது அரபு நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நுபுர் ஷர்மா, அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நவீன் ஜிண்டால் ஆகியோர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பா.ஜ.க-வையும், மத்திய அரசையும் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையில் ஃபஹாஹீல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குவைத் அரசு நாடு கடத்தவிருக்கிறது என சவுதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில மொழி நாளிதழான தி அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

முகமது நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்து - பாஜக
முகமது நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்து - பாஜக

தி அரப் டைம்ஸ் நாளிதழில், `` குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் குவைத் சட்டங்களை மதிக்க வேண்டும். குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் எந்த வகையான ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்கக் கூடாது என்பது சட்டம். நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதால் வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் குவைத்துக்குள் மீண்டும் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த நாடு கடத்தல் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

குவைத்தில் சட்டபூர்வமாக வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2019-ல் 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5-6 சதவிகிதமாக தொடர்ந்து வளர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism