Published:Updated:

``கீவ் நகர் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது!" - உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

``கீவ் நகரைப் பாதுகாக்க உக்ரைன் நாட்டின் குடிமக்கள் போராட வேண்டும்” - உக்ரைன் அதிபர்.

``கீவ் நகர் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது!" - உக்ரைன் அதிபர்

``கீவ் நகரைப் பாதுகாக்க உக்ரைன் நாட்டின் குடிமக்கள் போராட வேண்டும்” - உக்ரைன் அதிபர்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் தற்போது அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரை ரஷ்யப் படைகள் குறிவைத்துத் தாக்கிவருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் ராணுவத் தளம் ஒன்று கீவ் நகரில் தாக்கப்பட்டதாக ரஷ்யப் படைகள் தெரிவித்துவருகின்றன. கீவ் நகரைப் பாதுகாக்க, உக்ரைன் நாட்டின் குடிமக்கள் போராட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

இந்த நிலையில், அமெரிக்கா, உக்ரைன் பிரதமர் நாட்டிலிருந்து வெளியேற உதவுவதாகக் கூறியபோது உக்ரைன் பிரதமர் ``தாக்குதல்கள் இங்கேதான் நடைபெறுகின்றன, ஆயுதங்கள்தான் தேவை, பயணங்கள் அல்ல’’ எனக் கூறியதாக அமெரிக்க உளவுப்பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனியப் படை பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகிறது. இந்த நிலையில், ரஷ்யா கீவ் நகரைக் கைபற்றிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைன் அதிபர், "கீவ் நகரம் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நாங்கள் எதிர்த்து களம் காண்போம். இங்கிருந்து தப்பியோட மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism