Published:Updated:

ஆப்கன்: மசூதியில் தொழுகையின்போது பயங்கர குண்டுவெடிப்பு - 20-க்கும் அதிகமானோர் பலி எனத் தகவல்!

ஆப்கன் - குண்டுவெடிப்பு ( AP )

பயங்கர குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் காபூலிலுள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை நேரத்தில் தொழுகை நடைபெற்றது. அப்போது திடீரென பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் மசூதி இடிந்து விழுந்ததோடு, அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

ஆப்கன் - கோப்புப் படம்
ஆப்கன் - கோப்புப் படம்
Twitter/@TOLOnews

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தாலிபன் உளவுத்துறை அதிகாரி ஒருவர், ``இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சுகிறோம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன'' என்று கூறியிருக்கிறார்.

அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.