Published:Updated:

உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப் பதற்றம்? - தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!

அமெரிக்கா

தங்கள் தூதரக அதிகாரிகள் அனைவரும் உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப் பதற்றம்? - தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!

தங்கள் தூதரக அதிகாரிகள் அனைவரும் உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
அமெரிக்கா

அமெரிக்கா தனது பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதில் உக்ரைனையும் சேர்த்துக்கொள்ள அது முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்புக் கூட்டணியின் ஒரு பகுதியாவதை ரஷ்யா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. என்றாலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் பீரங்கிகள், போர் வாகனங்கள், ஏவுகணைகளுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும், எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா
அமெரிக்கா

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் படையெடுப்புக்குச் சாத்தியம் இருப்பதால், ஏற்கெனவே உக்ரைனுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேறவிருக்கின்றனர். இதற்கிடையே, `உக்ரைனில் தனது ஆதரவாளரைக்கொண்டு பொம்மை அரசு அமைக்க ரஷ்யா முயல்கிறது' என இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism