Published:Updated:

இறுதிச்சுற்றில் வெற்றி... இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார் லிஸ் ட்ரஸ்!

லிஸ் ட்ரஸ்

இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. புதிய தலைவரைத் தேர்வுசெய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.6 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துவந்தனர்.

லிஸ் டிரஸ், ரிஷி சுனக்
லிஸ் டிரஸ், ரிஷி சுனக்
ட்விட்டர்

இந்த வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுங்கட்சியின் தலைவர் அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் 60,399 வாக்குகளும்,லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.