Published:Updated:

பதவியிலிருந்ததோ 45 நாள்கள்தான்... ஆனாலும் ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் லிஸ் ட்ரஸ்! - ஏன் தெரியுமா?

லிஸ் ட்ரஸ் (Liz Truss) ( ட்விட்டர் )

பொது வாழ்வில் இன்னும் செயலாற்றிவரும் முன்னாள் பிரதமர்களுக்கு உதவுவதற்காக, இங்கிலாந்தில் 1991-ம் ஆண்டு, பொதுக் கடமைச் செலவுக் கொடுப்பனவு(Public Duty Costs Allowance) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

பதவியிலிருந்ததோ 45 நாள்கள்தான்... ஆனாலும் ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் லிஸ் ட்ரஸ்! - ஏன் தெரியுமா?

பொது வாழ்வில் இன்னும் செயலாற்றிவரும் முன்னாள் பிரதமர்களுக்கு உதவுவதற்காக, இங்கிலாந்தில் 1991-ம் ஆண்டு, பொதுக் கடமைச் செலவுக் கொடுப்பனவு(Public Duty Costs Allowance) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

Published:Updated:
லிஸ் ட்ரஸ் (Liz Truss) ( ட்விட்டர் )

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ்( Liz Truss) பதவியேற்றதையடுத்து, ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து லிஸ் ட்ரஸ் அமைச்சரவையிலிருந்து நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலக, அரசு கடும் நெருக்கடிக்குள்ளானது.

லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்

லிஸ் ட்ரஸ், பிரதமராகப் பதவியேற்று 45 நாள்களே ஆன நிலையில், திடீரென நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகினார். தற்போது, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோர் அடுத்து நடைபெறவிருக்கும் பிரதமர் பதவி ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லிஸ் ட்ரஸ் வெறும் 45 நாள்களே பிரதமராகப் பதவிவகித்த போதிலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வரி செலுத்துபவர்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ.1.05 கோடி வரை கொடுப்பனவு பெற உரிமை பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

லிஸ் ட்ரஸ் (Liz Truss)
லிஸ் ட்ரஸ் (Liz Truss)
ட்விட்டர்

அதாவது, பொது வாழ்வில் இன்னும் செயலாற்றிவரும் முன்னாள் பிரதமர்களுக்கு உதவுவதற்காக, இங்கிலாந்தில் 1991-ம் ஆண்டு, பொதுக் கடமைச் செலவுக் கொடுப்பனவு(Public Duty Costs Allowance) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் பணம், பொதுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான உண்மைச் செலவைச் சந்திக்க மட்டுமே செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதன்படி, 45 நாள்கள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்தாலும், முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1.05 கோடியைக் கொடுப்பனவாக லிஸ் ட்ரஸ் பெறுவார். இருப்பினும் சில அரசியல் தலைவர்கள், லிஸ் ட்ரஸ் இதற்கு தகுதியுடையவராக இருந்தாலும் தாமாக முன்வந்து இதனை விட்டுக்கொடுக்கவேண்டும் எனக் கூறிவருகின்றனர்.