Published:Updated:

கனடா: மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை... இந்தியா கண்டனம்

சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை - கனடா ( ட்விட்டர் )

`ரிச்மண்ட் ஹில்லில் இருக்கும் விஷ்ணு கோயிலிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைகிறோம்.' - இந்தியா

கனடா: மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை... இந்தியா கண்டனம்

`ரிச்மண்ட் ஹில்லில் இருக்கும் விஷ்ணு கோயிலிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைகிறோம்.' - இந்தியா

Published:Updated:
சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை - கனடா ( ட்விட்டர் )

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள ரிச்மண்ட் மலையில் விஷ்ணு கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலில் 5 மீட்டர் உயரமுள்ள மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை கடந்த 30 ஆண்டுகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக டொரொன்டோவின் இந்தியத் துணைத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ரிச்மண்ட் ஹில்லில் உள்ள விஷ்ணு கோயிலில் இருக்கும் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைகிறோம்.

சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை - கனடா
சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை - கனடா
ட்விட்டர்

இந்தக் குற்றம், வெறுக்கத்தக்கச் செயல். கனடாவிலுள்ள இந்தியச் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா காவல்துறையுடன் பேசியிருக்கிறோம்" எனத் தனது வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, கனடாவின் யார்க் பிராந்திய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஏமி பௌட்ரூ, ``இனம், தேசியம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம், பாலின அடையாளம் போன்றவற்றின் அடிப்படையில் பிறரைத் துன்புறுத்துபவர்களை யார்க் பிராந்திய காவல்துறை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ளாது. வெறுப்புக் குற்றங்களின் சமூகம் தழுவிய தாக்கத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Sean Kilpatrick

மேலும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புச் சார்பு சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் தீவிரமாக விசாரித்தும்வருகிறோம். மகாத்மா காந்தி சிலையைச் சிதைத்தவர்களுக்கு எதிராக, சட்டத்தின் முழு ஆதரவுடன் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள்" என்று கூறியிருக்கிறார்.