Published:Updated:

பாகிஸ்தானுக்கு அதிகரித்த சர்வதேச அழுத்தம்! - ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஹபீஸ் சயீத்
ஹபீஸ் சயீத்

உலகளாவிய பயங்கரவாத நிதியளிப்பு கண்காணிப்பு நிறுவனமான `பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு’ (FATF) பயங்கரவாத நிதிகளைத் தடுக்காவிடில், பாகிஸ்தானை பொருளாதார கறுப்புப் பட்டியலில் வைக்விருப்பதாகச் சொல்ல, அழுத்தம் மேலும் அதிகரித்தது.

2008 மும்பைத் தாக்குதல் சூத்திரதாரியும், ஜமாத்-உத்-தாவா (JuD) தலைவருமான ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முன்கள அமைப்பாகக் கருதப்பட்ட அமைப்பே ஜமாத்-உத்-தாவா-வின் (JuD)அமைப்பாளர் மற்றும் தலைவர் ஹபீஸ் சயீத். 2008-ல் மும்பையில் 10 பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில், 166 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இதனால், அவர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அவரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்றது. இதைத் தொடந்து ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எண் 1267-ன்படி டிசம்பர் 2008-ல் ஜமாத்-உத்-தாவா-வை ஒரு தீவிரவாத அமைப்பாகவும், ஹபீஸ் சயீத்-ஐ ஒரு தீவிரவாதியாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அமெரிக்க அரசு, ஹபீஸ் சயீத் குறித்த தகவலுக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு உலக அளவில் அழுத்தம் அளிக்கப்பட்டது.

சயீத்
சயீத்

உலகளாவிய பயங்கரவாத நிதியளிப்பு கண்காணிப்பு நிறுவனமான ‘பயங்கரவாத நிதி நடவடிக்கை பணிக்குழு’ (FATF) பயங்கரவாத நிதிகளைத் தடுக்காவிடில், பாகிஸ்தானை பொருளாதார கறுப்புப் பட்டியலில் வைக்கவிருப்பதாகச் சொல்ல, அழுத்தம் மேலும் அதிகரித்தது.

இதனால் , தலைமறைவான ஹபீஸ் சயீத்-ஐ பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிப்பு' வழக்குக்காகக் கைதுசெய்து, லாகூர் கோத் லாக்பேட் சிறையில் அடைத்தது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புத்துறை ஜமாத்-உத்-தாவா தலைவர்கள் மீது 41 வழக்குகளையும், ஹபீஸ் சயீத் மீது நான்கு வழக்குகளையும் பதிவுசெய்திருந்தது.

இந்தநிலையில், ஒரே நாளில் இரண்டு பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, ஹபீஸ் சயீத், அவரது இரண்டு உதவியாளர்களான ஜாபர் இக்பால், யஹ்யா முஜாஹித் ஆகியோருக்கு தலா பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரது மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு