Published:Updated:

வீட்டில் தயாரித்த துப்பாக்கி... ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வின் செயல்பாடுகளும் கொலையும்!

ஷின்சோ அபே

`அபேவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தியாவில் நாளை ஒரு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

வீட்டில் தயாரித்த துப்பாக்கி... ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வின் செயல்பாடுகளும் கொலையும்!

`அபேவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தியாவில் நாளை ஒரு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Published:Updated:
ஷின்சோ அபே

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பான் நாரா நகரில் தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது எதிர்பாரா கணத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அபே, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், `அபேவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தியாவில் நாளை ஒரு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

ஷின்சோ அபே - மோடி
ஷின்சோ அபே - மோடி

அபேவைச் சுட்ட கொலையாளி, டெட்சுயா யமகாமி என்பவர் எனத் தெரியவந்திருக்கிறது. அந்த நபரை போலீஸார் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். விசாரணையில் இந்த நபர் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அபேவைச் சுட குற்றவாளி பயன்படுத்தியது, வீட்டிலேயே கையால் தயாரித்த துப்பாக்கியாக இருக்கலாம் என ஜப்பானிய ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது குறித்தான செய்தியில், குற்றவாளியை போலீஸார் கைதுசெய்து இழுத்துச் செல்லும் படத்தைக் குறிப்பிட்டு, ஒரு ஜோடி குழாய் துப்பாக்கிகள், மரத்தடுப்பு மற்றும் டக்ட் டேப் ஆகியவற்றுடன்கூடிய துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாடு சட்டங்கள் இருக்கும் நாட்டில், முன்னாள் பிரதமர் ஒருவர் இப்படிப் பொதுவெளியில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக அளவில் பலநாட்டுப் பிரதமர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிக்கும் இந்த ஷின்சோ அபே யார் என்பதையும், அவர் குறித்த சில முக்கிய தகவல்களையும் காணலாம்.

துப்பாக்கி
துப்பாக்கி
twitter

ஷின்சோ அபே (1954-2022):

போருக்குப் பிந்தைய ஜப்பானில் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் நீண்டகாலப் பிரதமராக பணியாற்றியவர் அபே. இதற்கு முன்பு 2006 முதல் 2007 வரை அபே பிரதமராகப் பணியாற்றினார். இவர் ஜப்பானின் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியைச் சேர்ந்தவர்.

ஷின்சோ அபே
ஷின்சோ அபே

அபே அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா நோபுசுகே கிஷி 1957 முதல் 1960 வரை ஜப்பான் பிரதமராக இருந்தார். இவரின் தந்தை ஷிண்டாரோ அபே 1982 முதல் 1986 வரை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

அபே, பிரதமராகப் பணியாற்றியபோது வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் பல அழியாத முத்திரைகளைப் பதித்தார். மேலும் இவர் ஜப்பானின் பல ராணுவக் கொள்கைகளை மாற்றி அமைத்தும், பாதுகாப்பு செலவினங்களைப் பல மடங்கு உயர்த்தியும் ஜப்பான் ராணுவத்தை பலப்படுத்தினார்.

ஷின்சோ அபே
ஷின்சோ அபே

இவர் ஜப்பானின் நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். மேலும், ஜப்பானியப் பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற முயன்றார்.

ஷின்சோ அபே
ஷின்சோ அபே

இவரின் முந்தையப் பொருளாதார கொள்கைகளே, இவரை மீண்டும் 2012-ம் ஆண்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கச் செய்தன. மேலும் ஜப்பானின் Revisionist வரலாற்றின் மீது இவருக்கு இருந்த கடுமையான நிலைப்பாட்டால் இவர் வலதுசாரி தலைவர் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.

அபே, பல அரசியல் சர்ச்சைகளிலும் தென் கொரியாவுடனான மோசமான உறவாலும் கடுமையான சிக்கல்களில் சிக்கி விமர்சிக்கப்பட்டார்.

2014-ம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் விருந்தினராகக் கலந்துகொண்ட முதல் ஜப்பானியப் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.

ஷின்சோ அபே
ஷின்சோ அபே

இவரது பதவி காலத்தில்தான் இந்தியா - ஜப்பான் உறவு மிகுந்த வலுப்பட்டது. இவர் இந்தியப் பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2020-ம் ஆண்டு, அபே தனது பதவியை உடல்நலக் கோளாறுகளால் ராஜினாமா செய்தார். இவர் Ulcerative Colitis என்னும் குடல் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.