Published:Updated:

772 `VS' 69 போர் விமானங்கள்; உக்ரைன் - ரஷ்யா... இருநாடுகளின் படைபலம் என்ன?

உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா... இருநாடுகளின் படைபலம் என்ன?!

772 `VS' 69 போர் விமானங்கள்; உக்ரைன் - ரஷ்யா... இருநாடுகளின் படைபலம் என்ன?

உக்ரைன் - ரஷ்யா... இருநாடுகளின் படைபலம் என்ன?!

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்படி உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அரசாங்கத்தின் முக்கிய இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில், உலகளாவிய ஆயுத வர்த்தகத்தைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (International Peace Research Institute -SIPRI) இரண்டு நாடுகளின் ஆயுத பலம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒப்பீட்டளவில் உக்ரைனை விட ரஷ்யா மூன்று மடங்கு ஆயுத பலம் உடையதாக அறியமுடிகிறது.

ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ரஷ்யாதான் உலகின் முன்னணியில் உள்ளது. 2020-ல் ரஷ்யா 61.7 பில்லியின் அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்குச் செலவழித்துள்ளது. அதே நேரம் உக்ரைன் 5.9 பில்லியின் அமெரிக்க டாலர்களைச் செலவழித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன்  -  ரஷ்யா போர்ப் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம்
ட்விட்டர்

மேலும், உலகின் 140 நாடுகளின் ராணுவத் திறன்களை ஆய்வு செய்யும் Global Fire Power எனும் அமைப்பின் கருத்துப்படி ரஷ்யா ராணுவ ரீதியாக 2-ம் இடத்திலும், உக்ரைன் 22-ம் இடத்திலும் உள்ளது.

ரஷ்யப்படை பலம்

ரஷ்யாவின் படையில் 8,50,000 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். 4,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கின்றன. அதில், 772 போர் விமானங்கள் உள்ளன. அதே போலத் தரைப்படைகளைப் பொறுத்தவரை 12,500 டாங்கிகள், 30,000-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 14,000 பீரங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யா வைத்துள்ளது. கடற்படையைப் பொறுத்தவரை ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட 600-க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள், 70 நீர் மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவின் ராணுவப்படையில் உள்ளன.

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைன் படைபலம்:

உக்ரைன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2,50,000. ராணுவ விமானத்தைப் பொறுத்தவரை 318 விமானங்கள் இருக்கின்றன. அதில், 69 போர் விமானங்கள் உள்ளன. உக்ரைன் தரைப்படையில் சுமார் 2,600 டாங்கிகள் மற்றும் 12,000 கவச வாகனங்கள் உள்ளன. மேலும், 3,000-க்கும் அதிகமான பீரங்கிகள் உள்ளன. கப்பல் படையில் 38 கப்பல்கள் உள்ளன. நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் உக்ரைனிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism