இலங்கையில் கடந்த சில வாரமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை அரசு பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அரசு பதவி விலக வேண்டுமெனப் பொதுமக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, இலங்கையில் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு பிரதமர் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 27 அமைச்சர்கள் மகேந்திர ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து அனைத்து கட்சிகள் ஆட்சி அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுடன் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது, பிரதமர் மகிந்தர ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. அதனால் தனது பெரும்பானமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மகிந்திர ராஜபக்சே அரசு உள்ளது.
மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார். தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.