Published:Updated:

உக்ரைன்: வணிக வளாகம்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா - `பயங்கரவாதச் செயல்’ என ஜெலன்ஸ்கி காட்டம்

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் ( ட்விட்டர் )

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன்: வணிக வளாகம்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா - `பயங்கரவாதச் செயல்’ என ஜெலன்ஸ்கி காட்டம்

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
உக்ரைன் வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் ( ட்விட்டர் )

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன்மீது போர்தொடுத்தது. அன்று தொடங்கிய போர் இன்றுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றன. இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவு இதுவரை எட்டப்படாத நிலையில், மத்திய உக்ரைனின் க்ரெமென்சுக் நகரத்திலிருக்கும் நெரிசலான வணிக வளாகத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது.

பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த இந்த வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 16 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி மக்களை பதைபதைக்க வைக்கின்றன.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``க்ரிமென்சுக் நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ரஷ்யாவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பயங்கரவாதச் செயல்" என ஜெலன்ஸ்கி ரஷ்யாவைச் சாடியிருக்கிறார்.

உக்ரைனிலுள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!