Published:Updated:

``அம்மா எனக்கு பயமாக இருக்கிறது..!" - ஐ.நா-வில் வாசிக்கப்பட்ட ரஷ்ய வீரரின் குறுஞ்செய்தி

உக்ரைனின் ஐ.நா தூதுவர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்துவரும் சூழலில், ரஷ்ய ராணுவ வீரர், தான் இறப்பதற்கு முன்னர் தன் தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியை உக்ரைனின் ஐ.நா தூதுவர் நேற்று வாசித்துக் காட்டினார்.

``அம்மா எனக்கு பயமாக இருக்கிறது..!" - ஐ.நா-வில் வாசிக்கப்பட்ட ரஷ்ய வீரரின் குறுஞ்செய்தி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்துவரும் சூழலில், ரஷ்ய ராணுவ வீரர், தான் இறப்பதற்கு முன்னர் தன் தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியை உக்ரைனின் ஐ.நா தூதுவர் நேற்று வாசித்துக் காட்டினார்.

Published:Updated:
உக்ரைனின் ஐ.நா தூதுவர்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே கடந்த ஐந்து நாள்களுக்கு மேலாக போர் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் ஏராளமானோர் பலியாகிவருகின்றனர். இந்தப் போரால் இதுவரை லட்சக்கணக்கான உக்ரேனிய மற்றும் உக்ரைனில் வாழும் பிற நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து கடந்த திங்களன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அவசர பொதுக்கூட்டத்தில், தான் இறப்பதற்கு முன்னர் தன் தாயிடம் உரையாடிய ரஷ்ய ராணுவ வீரரின் உருக்கமான குறுஞ்செய்தியை உக்ரைனுக்கான ஐ.நா தூதுவர் செர்ஜி கிஸ்லிட்சியா வாசித்துக் காட்டினார்.

உக்ரைன்
உக்ரைன்

அந்த குறுஞ்செய்தியில்,

ரஷ்ய வீரர் (மகன்) :- அம்மா நான் க்ரீமியாவில் ராணுவப் பயிற்சியில் இல்லை.

தாய்:- பின்பு வேறெங்கு இருக்கிறாய், உனக்கு ஏதாவது பார்சல் அனுப்பட்டுமா?

மகன்:- எந்த மாதிரியான பார்சல் உங்களால் அனுப்ப முடியும் அம்மா?

தாய்:- நீ எதைப் பற்றிப் பேசுகிறாய், என்ன நடந்தது?

மகன்:- அம்மா நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. நாங்கள் எல்லா நகரங்களின் மீதும் வெடிகுண்டுகளை வீசுகிறோம். பொதுமக்களைக்கூட நாங்கள் குறிவைக்கிறோம். எங்களை அவர்கள் வரவேற்பார்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் வாகனங்களின் சக்கரங்களில் விழுந்து எங்களை அவர்கள் கடந்துசெல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எங்களை பாசிசக்காரர்கள் என்கிறார்கள். இது மிகவும் கடினமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.நா
ஐ.நா

என அந்த ரஷ்ய ராணுவ வீரர் கூறியிருப்பதாக உக்ரைனின் ஐ.நா தூதுவர் செர்ஜி கிஸ்லிட்சியா சபையில் வாசித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism