Published:Updated:

‘நாட் மை கிங்!’ முடிவுக்கு வருமா முடியாட்சி?

சார்லஸ்
பிரீமியம் ஸ்டோரி
சார்லஸ்

பிரிட்டனில் ஜனநாயகம் மீறப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. முடியாட்சி குறித்துக் கேள்வி கேட்டால், காவல்துறையை வைத்து மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?’’

‘நாட் மை கிங்!’ முடிவுக்கு வருமா முடியாட்சி?

பிரிட்டனில் ஜனநாயகம் மீறப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. முடியாட்சி குறித்துக் கேள்வி கேட்டால், காவல்துறையை வைத்து மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?’’

Published:Updated:
சார்லஸ்
பிரீமியம் ஸ்டோரி
சார்லஸ்

எலிசபெத் ராணியின் மறைவுக்காக ஆயிரக்கணக் கானோர் பிரிட்டன் வீதிகளில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக் கும் வேளையில், மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். `நாட் மை கிங்’ (என்னுடைய மன்னரில்லை) என்ற பதாகை களை ஏந்தி புதிய மன்னருக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். #NotMyKing என்ற ஹேஷ்டேக் ட்விட்டரிலும் டிரெண்டாகி வருகிறது. எதற்காக இந்த எதிர்ப்பு?

`நாட் மை கிங்’ போராட்டம்!

பிரிட்டனை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்தது இரண்டாம் எலிசபெத் மட்டுமே. கரன்சி, பாஸ்போர்ட் என அனைத்திலும் எலிசபெத்தின் பெயரும் புகைப்படமும் பொறிக்கப்பட்டிருக்கும். இவ்வளவு ஏன்... பிரிட்டன் அரசாங்கமே, `மாட்சிமை தாங்கிய மகாராணி அரசாங்கம்’ என்ற பெயரில்தான் நடத்தப்பட்டது. அதேநேரம், பிரிட்டன் அரசாங்கத்தில், மகாராணியால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. பிரதமரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்கவோ, மக்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பொது வெளியில் கருத்து சொல்லவோ மகாராணிக்கு அதிகாரம் கிடையாது. மொத்தத்தில் அதிகாரமற்ற ஓர் அலங்காரப் பதவிதான் பிரிட்டன் முடியாட்சி.

‘நாட் மை கிங்!’ முடிவுக்கு வருமா முடியாட்சி?

எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, அவரின் மூத்த மகன் சார்லஸ், பிரிட்டனின் புதிய மன்ன ராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் பொறுப் பேற்ற மறுநாளே, `நாட் மை கிங்’ என்ற பதாகை களுடன் முடியாட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்ப வர்கள் கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களில் சிலரை பிரிட்டன் காவல்துறை கைது செய்திருக்கிறது. மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், `சார்லஸ்தான் புதிய மன்னர்’ என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, `யார் அவரைத் தேர்வு செய்தது?’ என்று சத்தமாகக் கேள்வியெழுப்பினார் சைமன் ஹில் என்பவர். இதையடுத்து அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

``பிரிட்டனில் ஜனநாயகம் மீறப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. முடியாட்சி குறித்துக் கேள்வி கேட்டால், காவல்துறையை வைத்து மிரட்டுவது எந்த வகையில் நியாயம்?’’ என்று சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பிவருகின்றனர். மற்றவர்கள்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நியாயமற்ற, சத்தமான போராட் டங்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்ய பிரிட்டனின் அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக் கிறது. அந்தச் சட்டத்தின்கீழ் சிலர் கைதுசெய்யப் பட்டிருப்பதற்கு எதிர்ப்புகள் வலுத்திருக்கின்றன. எதிர்ப்புகளுக்குப் பிறகு காவல்துறை தரப்பிலிருந்து, ``பொதுமக்களுக்குப் போராட அனைத்து உரிமை களும் இருக்கின்றன. அந்த உரிமை காப்பாற்றப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘நாட் மை கிங்!’ முடிவுக்கு வருமா முடியாட்சி?

புதிய பிரதமரின் பழைய போராட்டம்!

பிரிட்டனில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் லிஸ் ட்ரஸ், ``நாட்டில் பெரும்பான்மை யினருக்கு இது தேசிய துக்கத்தை அனுசரிக்கும் காலமாக இருக்கிறது. அதேநேரம் போராடுவது அடிப்படை உரிமை. நமது ஜனநாயகத்தின் தூண் அது’’ என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், லிஸ் ட்ரஸ் தனது இளம் வயதில் முடியாட்சிக்கு எதிராகப் போராடியபோது எடுத்த காணொளிகள் வைரலாகிவருகின்றன. அதில், ``முடியாட்சி என்பது அவமானகரமானது. நான் அரச குடும்பத் திலிருப்பவர்கள் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எதிரானவள் அல்ல. ஆனால், ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஆட்சி செய்யும் தகுதி வந்து விடும் என்ற கருத்துக்கு எதிரானவள்’’ என்று கூறியிருக்கிறார் லிஸ்.

புதிய மன்னராகப் பதவியேற்றிருக்கும் சார்லஸ் பிரிட்டனுக்கு மட்டுமல்ல கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு ஆட்சித் தலைவராகக் கருதப்படுகிறார். பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவரும் இனி சார்லஸ் தான். ``நவீன சமுதாயத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் குடியரசாகப் பிரிட்டன் மாற வேண்டும்’’ என்பதே மன்னராட்சி முறையை எதிர்க்கும் பிரிட்டன் மக்களின் கோரிக்கை.

முடிவுக்கு வருமா முடியாட்சி?

``பிரிட்டன் முடியாட்சிக்கு எதிரான குரல்கள் இப்போதல்ல... 18-ம் நூற்றாண்டிலிருந்தே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பிரெஞ்ச் புரட்சியால் ஈர்க்கப்பட்ட தாமஸ்பெய்ன் என்பவர், `பிரபுத்துவ நில உரிமையை சீர்திருத்தம் செய்ய வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்’ என குரல் கொடுத்தார். அவருக்கு சிலர் ஆதரவும் தெரிவித்தனர். 1837-ல் பிரிட்டன் மகாராணியாகப் பொறுப்பேற்ற விக்டோரியாவின் ஆட்சி காலத்தில் முடியாட்சிக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்தன. விக்டோரியா வின் மகன் ஆல்பர்ட் எட்வர்ட் சூதாட்டத்தில் ஈடுபட்டது, காதல் துரோகங்கள் செய்தது உள் ளிட்டவற்றால் அரச குடும்பத்துக்கு அவப்பெயர் உண்டானது. தொடர்ந்து, அவ்வப்போது முடியாட்சிக்கு எதிரான குரல் வந்து கொண்டேயிருந்தன.

லிஸ் ட்ரஸ்,
லிஸ் ட்ரஸ்,

தற்போது சார்லஸ் மன்னரான பிறகு, மீண்டும் அந்த எதிர்ப்புகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக் கின்றன. கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுக ளிலும் பிரிட்டன் முடியாட்சிக்கு எதிராகச் சிலர் போராடிவருகின்றனர். பிரிட்டன் அரசர் தலைமை வகிக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்துகூட பார்படாஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்தகாலங்களில் வெளியேறியிருக்கின்றன. அதே சமயம், `முடியாட்சியை விரும்புகிறோம்’ என்ற பதாகையுடன் பலரும் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பதைக் காண முடிகிறது. `வி லவ் ராயல் ஃபேமிலி’ எனத் தீவிரமாக அரச குடும்பத்தை நேசிக்கும் மக்களும் பிரிட்டனில் இருக்கின்றனர். தவிர, முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசமைப்புச் சட்டத் திருத்தமும் தேவைப்படும். அதற்கு ஒப்புதல் அளிக்கும் இடத் திலும் மன்னரே இருப்பார். எனவே, உடனடியாக முடியாட்சி முடிவுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை’’ என்கின்றனர் பிரிட்டன் அரசியல் வல்லுநர்கள்.

பிரிட்டன் அரச குடும்பத்திலிருப்பவர்களே, ‘இது தேவைதானா?’ எனச் சிந்திக்கும்போதுதான் அங்கு முடியாட்சி முடிவுக்கு வரும்போல!